அமேசான் 2025 ஸ்மார்ட் டிவி சலுகைகள்: தள்ளுபடி & கார்டு சலுகைகள்
இந்தியாவில் பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் நிலையில், மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனைகளில் ஒன்றான Amazon Great Indian Festival 2025 விற்பனை குறித்த அறிவிப்பு வந்தாச்சு. இந்த வருடம், செப்டம்பர் 23, 2025 அன்று தொடங்கவிருக்கும் இந்த விற்பனை, வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடியான சலுகைகளை வழங்க உள்ளது. அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு வழக்கம் போல 24 மணி நேரம் முன்னதாகவே, அதாவது செப்டம்பர் 22-ல் இந்த விற்பனையை அணுகும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த விற்பனையோட பெரிய ஈர்ப்பே, முன்னணி பிராண்டுகளான சோனி, சாம்சங், மற்றும் TCL போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிரடி தள்ளுபடிகள் தான். வழக்கமான விலையை விட கிட்டத்தட்ட பாதி விலையில் இந்த டிவிகளை வாங்க முடியும்.
சோனி பிராவியா 2 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகிள் டிவி: இந்த டிவியோட ஒரிஜினல் விலை ரூ. 99,990. ஆனா, இந்த விற்பனையில வெறும் ரூ. 54,990-க்கு கிடைக்கும். கிட்டத்தட்ட ரூ. 45,000 தள்ளுபடி கிடைக்கிறது ஒரு பெரிய ஆஃபர்தான். சோனி டிவிகள் எப்போதும் அவற்றின் படத் தரம் மற்றும் நீண்ட ஆயுளுக்குப் பேர் போனவை.
சாம்சங் 55-இன்ச் டி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி: இந்த 55 இன்ச் டிவியோட எம்.ஆர்.பி. ரூ. 68,990. ஆனா, இதை வெறும் ரூ. 39,990-க்கு வாங்கலாம். சாம்சங்-ன் பிராண்ட் மதிப்பு மற்றும் இந்த பிரைஸ் பாயிண்டில் கிடைக்கக்கூடிய அம்சங்கள் ஒரு நல்ல பேக்கேஜா இருக்கும்.
TCL 75-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகிள் டிவி: பெரிய ஸ்கிரீன் டிவி வாங்கணும்னு பிளான்ல இருக்கிறவங்களுக்கு இந்த ஆஃபர் ஒரு வரப்பிரசாதம். ரூ. 2,58,900 விலையுள்ள இந்த டிவி வெறும் ரூ. 61,999-க்கு கிடைக்கும். இது கியூஎல்இடி டெக்னாலஜி என்பதால், படத் தரம் ரொம்பவே துல்லியமாக இருக்கும்.
இந்த தள்ளுபடி விலைகளுக்கு மேல, வாடிக்கையாளர்கள் இன்னும் கொஞ்சம் பணத்தை சேமிக்க முடியும். எஸ்பிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கூடுதலாக 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். EMI பரிவர்த்தனைகளுக்கும் சிறப்பு சலுகைகள் உள்ளன. இதுமட்டுமில்லாம, சில குறிப்பிட்ட டிவிகளுக்கு கூப்பன்களும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்படும்.
ஸ்மார்ட் டிவிகள் இப்போ வீட்டுக்கு ஒரு முக்கியமான பொருளா மாறிடுச்சு. இந்த விற்பனை, பழைய மாடல்களை மாத்திட்டு புது 4கே, கியூஎல்இடி அல்லது கூகிள் டிவிகளை வாங்க ஒரு நல்ல வாய்ப்பு. குறிப்பாக, பண்டிகை காலங்கள்ல குடும்பத்தோட சேர்ந்து புது படங்களோ, கிரிக்கெட் மேட்ச்சோ பார்க்க இந்த டிவிகள் ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த விற்பனைக்கான தேதி நெருங்கி வருவதால், உங்களுக்குத் தேவையான டிவியைத் தேர்ந்தெடுத்து கார்ட்-ல் வைத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
...மேலும்