Amazon Great Indian Festival Sale 2025 HP, ASUS, Lenovo பிராண்டுகளின் Ryzen 3, Core i3, Core i5 மாடல்களை குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.
Photo Credit: Lenovo
அமேசான் விற்பனை 2025: லெனோவா 27-இன்ச் QHD i9 32GB/1TB AiO ரூ. 1,05,990க்கு
இந்த பண்டிகை காலத்தில் உங்கள் வீட்டில் ஒரு புதிய கம்ப்யூட்டரை வாங்கி வைக்க விரும்பினால், அதை இப்போதே செய்து விடுங்கள். Amazon Great Indian Festival Sale 2025-ன் 'Diwali Special' இப்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச் என பல பொருட்களில் தள்ளுபடி இருந்தாலும், குறிப்பாக All-in-One PC மாடல்களில் சலுகைகள் மிரட்டுகின்றன.வழக்கமான சலுகைகளுக்கு மேல், வாடிக்கையாளர்கள் Axis Bank, Bobcard, IDFC First Bank மற்றும் RBL Bank கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை பெற முடியும். இந்த வங்கி சலுகைகள் மொத்தமாக ரூ. 65,000 வரை சேமிக்க உதவுகின்றன. ஆனால், இந்த Amazon Sale 2025 சலுகைகள் அனைத்தும் அக்டோபர் 12, இரவு 11:59 மணி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
ஒரு All-in-One PC-ஐ குறைந்த விலையில் வாங்க நினைப்பவர்களுக்கு, ASUS A3202 மாடல் ஒரு அருமையான தேர்வாகும். இதன் அசல் விலை ரூ. 47,990 ஆக இருக்கும் நிலையில், இப்போது வெறும் Rs. 24,990-க்கு விற்கப்படுகிறது. இது 21.45-inch FHD டிஸ்பிளே, Celeron Processor மற்றும் 8GB RAM, 256GB Storage வசதியுடன் வருகிறது. அதேபோல், HP All-in-One 24-inch Ryzen 3 மாடல் ரூ. 36,990-க்கு கிடைப்பது மாணவர்களுக்கும், அடிப்படை அலுவலகப் பணிகளுக்கும் ஏற்றது.
நடுத்தர பட்ஜெட்டில் அதிக செயல்திறன் கொண்ட All-in-One PC மாடல்களும் சலுகை விலையில் உள்ளன. ASUS V440 23.8-inch Core i3 மாடல் இப்போது ரூ. 39,990-க்கு விற்கப்படுகிறது. இது 8GB RAM மற்றும் 512GB Storage உடன் வருவதால், பல வேலைகளை ஒரே நேரத்தில் சுலபமாக கையாளலாம். சற்று பெரிய திரை தேவைப்படுபவர்களுக்கு, HP-யின் 27-inch Core i3 மாடல் ரூ. 48,990-க்கு கிடைக்கிறது. மேலும், ஒரு படி மேலே சென்று அதிக சக்திவாய்ந்த Core i5 Processor உடன் கூடிய ASUS A3402 23.8-inch மாடலை ரூ. 54,990-க்கு வாங்கலாம். அதிகப்படியான வேலைகளுக்கு, HP-யின் 27-inch Core i5, 16GB RAM மற்றும் 1TB Storage கொண்ட மாடல் ரூ. 69,990-க்கு விற்கப்படுகிறது. இதைவிட சக்தி தேவைப்படுபவர்களுக்காக, Lenovo-வின் 27-inch QHD i9 Processor, 32GB RAM மற்றும் 1TB Storage கொண்ட டாப்-எண்ட் மாடல் ரூ. 1,05,990-க்கு தள்ளுபடியில் உள்ளது.
இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே. எனவே, உங்கள் தேவைக்கு ஏற்ற All-in-One PC மாடலை உடனே தேர்வு செய்து சலுகை முடிவதற்குள் வாங்கி பயன் பெறுங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்