இன்று முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை அமேசான் இந்தியா சார்பில் நடத்தப்படும் இந்த ஆப்பிள் சேலில் முக்கிய ஆப்பிள் தயாரிப்புகள் தள்ளுபடி பெறுகின்றன.
மேலும் இந்த சேலில் பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஆன்-இயர் ஹெட்போன்ஸ் தள்ளுபடி பெற்று ரூ.5,300க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து நடத்தும் 'ஆப்பிள் ஃபீஸ்ட்' சேலில் ஐபோன், மேக்புக் மடிக்கணினி, ஆப்பிள் வாட்ச்கள், ஐபேட் மாடல்கள் போன்றவை தள்ளுபடி விற்பனையில் வாங்கக் கிடைக்கிறது. அமேசான் இந்தியாவின் சேல் இன்று (மார்ச் 22) முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆப்பிள் தயாரிப்புகள் இடம்பெறும் இந்த 7 நாட்கள் சேலில் ஆமேசான் சார்பிலும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அதில் கட்டணமில்லா தவணைத் திட்டம் மற்றும் ஐசிஐசிஐ மற்றும் ஸ்டேட் வங்கியுடன் இணைந்து வழங்கும் திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த சேலில் ஐபோன்X, ஐபேட் 6வது தலைமுறை மற்றும் ஆப்பிள் வாட்ச் 3 தயாரிப்புகள் அதிக தள்ளுபடியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபோன் X போன் தனது அசல் விலையான ரூ.91,900யில் இருந்து தள்ளுபடி பெற்று ரூ.73,999க்கு விற்பனை செய்யப்படுகறிது.
அதேபோல் ஐபோன் 6S தயாரிப்பு தனது தற்போதைய விலையான 29,000யில் இருந்து குறைந்து 27,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XS, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 7 போன்களுக்கு கூடுதல் கட்டனமில்லா தவணைத் திட்ட வசதிகளை இந்த சேலில் பெற முடியும்.
ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ஐபோன் XR போன்கள் இந்த சேலில் ரூ.67,999 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆப்பிளின் மேக்புக் வகை மடிக்கணினிகள் இந்த சேலில் ரூ.15,000 வரை தள்ளுபடி பெற்றுள்ளது. மேலும் குறிப்பிட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு வாங்குபவர்களுக்கு 3 மாதங்களுக்கு கட்டணமில்லா தவணைத் திட்ட வசதிகளையும் கூடுதலாக பெற முடியும்.
நெடு நாட்களாக ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்டவர்களுக்கு இந்த சேலின் சரியான நேரமாக இருக்கும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 தனது ஓரிஜினல் விலையான ரூ.28,900யில் இருந்து குறைந்து ரூ.23,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த முக்கிய தயாரிப்புகளுடன் அமேசான் சார்பில் ஐபேடுக்குகத் தேவையான ஸ்மார்ட் கேஸ் போன்ற இதர பொருட்களும் தள்ளுபிடயில் வழங்கப்படுகின்றன.
மேலும் இந்த சேலில் பீட்ஸ் சோலோ 3 வயர்லெஸ் ஆன்-இயர் ஹெட்போன்ஸ் தள்ளுபடி பெற்று ரூ.5,300க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale