அமேசானின் வீக் ஒன்லி ஆப்பிள் ஃபெஸ்ட் சேல் தொடங்கியது. இதில் பல ஆப்பிள் தயாரிப்புகளுக்கு பிரத்தியோகமான ஆஃபர்கள் வழங்கப்படுகிறது. இந்த சேல் அடுத்த சனிக்கிழமை வரை நடைபெறும். இந்த 7 நாள் அமேசான் சேலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் பிற சாதனங்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன.
அமேசான் ஆப்பிள் சேல் ஆஃபர்
நோ-காஸ்ட் இஎம்ஐ-யில் ஐபோன்களுக்கு 16,000 வரை தள்ளுபடி வழங்குவதாக அமேசான் தெரிவித்துள்ளது. ஐபோன் எக்ஸ்-ஆனது ரூ. 74,999 (MRP ரூ. 79,999). ஐபோன் 6எஸ் ரூ. 24,999(MRP ரூ.29,900) மற்றும் ஐபோன் 6 ரூ. 21,999 (MRP ரூ. 23,750). இந்த இரு போன்களும் நோ-காஸ்ட் இஎம்ஐ-யில் பெற முடியும்.
இதைதவிர, ஐபோன், எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் பிற ஐபோன் மாடல்களும் நோ-காஸ்ட் இஎம்ஐ-யில் கிடைக்கிறது.
சமீபத்தில் அறிமுகமான மேக்புக் ஏர்(2018) விலை ரூ.1,05,900 (MRP ரூ.1,14,900) ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் மேக்புக் ஏரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதுவே முதல்முறை. மேக்புக் ஏர் 2017 வேரியண்ட்டின் விலை ரூ.57,990 (MRP ரூ.62,990) எக்ஸ்சேன்ஜ் ஆஃபருடன் நோ-காஸ்ட் இஎம்ஐ-யும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஃபெஸ்ட் சேலில் 6-த் ஜெனரேஷன் ஆப்பிள் ஐபேட் 9.7 இன்ச் Wi-Fi-ன் விலை ரூ.23,999 (MRP ரூ.28,000) ஆக குறைந்துள்ளது.
எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களை பயன்படுத்தி ரூ.9,960 வரை கூடுதல் தள்ளுபடியினை பெறலாம். பீட்ஸ் இபி (ML992ZM/A) இயர்போன்களுக்கும் தற்போது தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளாக் மற்றும் புளூ நிற வேரியண்ட்களின் விலை ரூ.5,799 (MRP.ரூ.8,000) ஆக குறைந்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்