அமேசான் இந்தியா நிறுவனம் தனது ஐந்தாம் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இதற்காக வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையாக கேஷ்-பேக் ஆஃபர் அளிப்பதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அமேசான் வலைப்பக்கத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் 1000 ரூபாய்க்கு மேல் ஷாப்பிங் செய்தால் 250 ரூபாய் கேஷ் பேக் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபர் அறிவிப்பு குறித்தான அதிகாரப்பூர்வ தகவலை அமேசான் பக்கத்தில் அதனது தலைவர் சிஇஓ ஜெஃப் பீசோஸ் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன், சியாட்டில் நகரத்தில் தலைமை இடங்களைக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது ஆன்லைன் விற்பனையைத் தொடங்கியது. அதன் பின்னர் அமேசான் ப்ரைம் என்னும் சேவை, அமேசான் ப்ரைம் வீடியோ, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் அமேசான் மியூசிக் ஆகிய பல அறிமுகங்களை இந்தியாவுக்கு அளித்தது.
இன்று இந்நிறுவனத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்லைனில் 1000 ரூபாக்கு ஷாப்பிங் செய்து ஆன்லைன் மூலமே பணம் செலுத்துவோருக்கு 250 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைனில் பொருள் ஆர்டர் செய்ததில் இருந்து மூன்று நாள்களுக்குள் பணம் திரும்ப வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஇஓ பீசோஸ் வெளியிட்டுள்ள கடிதத்தில், “இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் அமேசான் இந்ந்தியா நிறுவனத்துக்கு சிறந்த வரவேற்பும் ஆதரவும் அளித்த வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்