இரண்டாம் நாள், அமேசான் பிரைம் சேலில் என்ன ஆஃபர்கள்?

அமேசான் பிரைம் டே விற்பனையின் இரண்டாவது மற்றும் கடைசி நாளில் பலதரப்பட்ட பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அமேசான் அறிவித்துள்ளது

இரண்டாம் நாள், அமேசான் பிரைம் சேலில் என்ன ஆஃபர்கள்?
ஹைலைட்ஸ்
  • அமேசானின் சிறப்பு விற்பனை ஜூலை 18, நள்ளிரவு 12 மணி வரை நடக்கும்
  • ஹெச்டிஎப்சி வங்கிகளின் மூலம் பொருள் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி
  • அமேசான் பே பேலன்ஸ் பயன்பாட்டில்10% கேஷ் பேக்
விளம்பரம்

அமேசான் பிரைம் டே விற்பனையின் இரண்டாவது மற்றும் கடைசி நாளில் பலதரப்பட்ட பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அமேசான் அறிவித்துள்ளது.இந்த சலுகைகள்  இன்று நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே. புதிதாக பொருட்கள் ஏதாவது வாங்க நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய பரிசாக இருக்கும்.

இந்த  விற்பனையில் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு உடனடி சலுகையும், ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தி  பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10% கேஷ் பேக் மற்றும் 50,000 ரூபாய்க்கு பொருள் வாங்குவார்கள் 1,700 ரூபாய் தள்ளுபடியும்,  8,250 ரூபாய் கேஷ்பேகும் உள்ளது. அமேசான்  பே பேலன்ஸ் பயன்படுத்தி பொருள் வாங்கினால் 10% கேஷ்பேக். 

இன்றைய அமேசான் பிரைம் டே  மொபைல் ஆஃபர்கள்

ஹானர் 7x (4GB ரேம் 64 GB மெமரி ), கொண்ட ஸ்மார்ட் போன் 14,999 ரூபாயிலிருந்து      13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹுவாய் p20 லைட் ஸ்மார்ட்ஃபோன், அதன் அறிமுக விலை 19,999-ல் இருந்து 17,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் 6 ரெட், இந்தியாவில்  முதன்முதலாக விற்பனையை தொடங்குகிறது.  அதன் விலை 39 ,999 ரூபாய் ஆகும். எக்ஸ்சேஞ் விலையாக 2000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெட்மி Y2 ஃபிளாஷ் சேல் ஜூலை 16 முதல் 17 மதியம் 12 மணி வரை  விற்பனை செய்யப்பட உள்ளது. சாம்சங் பிரீமிய கேலக்ஸி நோட் 8 சிறந்த விலையாக 67,900 ரூபாயில் இருந்து 55,990 ரூபாய்க்கு கிடைக்கிறது.

விவோ போன்களுக்கு 3,000 ரூபாய் வரை தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்சுக்கு 6,000 ரூபாயும் கிடைக்கும். மோட்டோ G6 போனுக்கு, கூடுதலாக 2000 ரூபாய் கிடைக்கும். மோட்டோ E5 பிளஸ் போனுக்கு, ‌எக்ஸ்சேஞ் விலை 1,000ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. ஓப்போ மொபைல்களுக்கு 4000 ரூபாய் தள்ளுபடியும் எக்ஸ்சேஞ்சும், 3,000 ரூபாய் வரை சலுகையும் அளிக்கப்படுகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 10,700 ரூபாய் வரை ஆஃபரும், 10,000 ரூபாயும் எக்ஸ்சேஞ்சும் கொடுக்கப்படுகிறது. 

போஸ் QC25 பிரைம் டே சிறப்பு சலுகையாக 12,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேனான் தொடக்க நிலை EOS 1300D  20,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மாலை 6 மணிக்கு துவங்கும் ஃபிளாஷ் சேலில், ஒரு டிவிக்கான பணம் கொடுத்து இரண்டு டிவிகளை பெற்றுக்கொள்ளலாம். மற்றொரு ஃபிளாஷ் சேலில் டி.சி.எல் 75 இன்ச், ஸ்மார்ட் டி.வி 32,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அமேசான் பொருட்களின் மீதும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கோ டாட் 2,449 ரூபாய் சிறப்பு விலைக்கும், எக்கோ ஸ்போர்ட்.  கிண்டில் ஒயிட் பேப்பர் வைஃபை 25 சதவீதம் தள்ளுபடியுடனும், எல்லா புதிய கிண்டில்களுக்கும்   20 சதவீதம் தள்ளுபடியும், கிண்டில் ஒயாசிஸுக்கு 15 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. அமேசான் பிரைம் கிண்டில் கிரெடிட்ஸ் மூலம் பொருள் வாங்குபவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும் பிரைம்   வாடிக்கையாளர்களுக்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் கேஷ் பேக்கும் அறிவித்துள்ளது அமேசான். அமேசான் ஃபையர் டி.வி ஸ்டிக் 2,799 ரூபாய்க்கு கிடைக்கிறது.

கேமரா, டி.வி, லேப்டாப், டேப்ளட் புளூடூத் ஸ்பீக்கர் ஆகியவற்றுக்கு 70 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.

மின்னணு பொருட்கள் எம்.ஐ பவர் பேங்க் 899 ரூபாயில் கிடைக்கிறது. சென்ஹெய்சர்   மற்றும் போஸ் ஆடியோ பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது DSLR கேம்ராவுக்கும் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. சீகேட், டெல், ஹெச்.பி, லெனோவோ  போன்ற லேப்டாப்களுக்கும்  55 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. திங்கள் நள்ளிரவிலிருந்து சில பொருட்களுக்கு 30% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிகளுக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. WhatsApp Group-களில் இப்போ @all யூஸ் பண்ணலாம்! முக்கியமான அறிவிப்புகள் இனி எல்லாருக்கும் உடனே போகும்!
  2. JioSaavn-ல் விளம்பரம் இல்லாம பாட்டு கேட்க ஆசையா? ரூ.399-க்கே 1 வருடம் சப்ஸ்கிரிப்ஷன்
  3. iQOO 15-ன் பர்ஃபார்மன்ஸை இனி இந்தியாவிலும் பார்க்கலாம்! Snapdragon 8 Elite Gen 5, OriginOS 6 உடன் நவம்பரில் வருகிறது!
  4. OnePlus-ன் கேமிங் ராட்சசன்! Ace 6-ல் இதுதான் டாப்: Snapdragon 8 Elite, 165Hz ஸ்கிரீன், ரெக்கார்டு பிரேக் பேட்டரி
  5. மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!
  6. கேமரா, பேட்டரி, பர்ஃபார்மன்ஸ் – எல்லாத்துலேயும் டாப்! Realme GT 8 Pro லான்ச்! விலையோ ₹49,440-ல் இருந்து ஆரம்பம்
  7. Samsung Galaxy XR ஹெட்செட் அறிமுகம் – Snapdragon XR2+ Gen 2, AI திறன்! வாங்க ரெடியா?
  8. கேமிங் பிரியர்களுக்கு விருந்து! iQOO 15 வந்துருச்சு – 100x Zoom, மூணு 50MP கேமரா!
  9. வாட்ஸ்அப் யூசர்களே, இனி ChatGPT வேலை செய்யாது! WhatsApp-ன் புதிய விதிமுறைகள்
  10. Redmi K90: 7,100mAh பேட்டரி, Bose ஆடியோ உடன் அக்டோபர் 23ல் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »