மீண்டும் வருகிறது ’அமேசான் கிரேட் இண்டியன் சேல்’

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
மீண்டும் வருகிறது ’அமேசான் கிரேட் இண்டியன் சேல்’

கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல் அக்.24 ஆம் தேதி மீண்டும் வருகிறது.

ஹைலைட்ஸ்
 • கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல் சேல் வரும் அக்.24ம் தேதி மீண்டும் தொடங்குகிறது
 • ஐசிஐசிஐ மற்றும் சிட்டி பேங்க் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கேஷ் பேக்
 • தள்ளுபடி விலையில், ஸ்மார்ட்போன், எல்இடி டிவி, வீட்டு உபயோகப் பொருட்களைப்

ஆன்லைனின் விழாக்கால விற்பனை இன்னும் முடிவடையவில்லை. இந்த மாத தொடக்கத்தில், ஆன்லைன் சேலில் வெற்றிகண்ட அமேசான். கிரேட் இண்டியன் சேலின் இரண்டாம் சுற்று விற்பனைக்கான தேதியை தற்போது அறிவித்துள்ளது. அக்.24ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கி அக்.28ம் தேதி இரவு 11:59 வரை நீடிக்கும். இதன் மூலம் தள்ளுபடி விலையில் மீண்டும் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். கிரேட் இண்டியன் சேலின் இரண்டாம் சுற்றிலும் ஏராளமான ஆஃபர்களும், புதிய பொருட்களின் பிரத்யோக விற்பனையும் அறிவிக்கப்படும் என்று அமேசான் இந்தியா கூறியுள்ளது.

இந்த ஐந்து நாள் விற்பனையில், ஸ்மார்ட்போன்., எல்.இ.டி டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மேலும் பல பொருட்களை வாங்கலாம். இந்த முறை அமேசான் ஐசிஐசிஐ மற்றும் சிட்டி பேங்க் நிறுவனத்துடன் இணைந்து, கிரேட் இண்டியன் சேலில் ஒவ்வொரு முறை பொருட்களை வாங்கும்போதும் 10 சதவீத கேஷ் பேக்கினை வழங்குகிறது. தள்ளுபடி விற்பனை நடைபெறும் ஐந்து நாட்களும் அமேசானின் புதிய வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்கள் அனைத்தும் ஃப்ரீ ஷிப்பிங் செய்யப்படும்.

கிரேட் இண்டியன் சேல் நடைபெறும் ஒவ்வொரு நாளும் ரெட்மி 6ஏ விற்பனையில் இருக்கும். அமேசானின் ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் மூன்றாம் தலைமுறை எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ் தள்ளுபடி விலையில் கிடைக்கும். மேலும் கிண்டல் பயன்பாட்டாளர்களுக்கு, விற்பனையில் சிறந்த புத்தகங்களை ரூ.19க்கு வழங்குகிறது. கிண்டலின் அன்லிமிடட் சந்தா ரூ. 1499மட்டுமே (வழக்கமாக ரூ.2,388).

இந்த வார தொடக்கத்தில் முடிவடைந்த கிரேட் இண்டியன் சேலின் முதல் சுற்றில் ஒன்பிளஸ் 6, ஹூவாய் பி20 ப்ரோ மேலும் பல ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன. இரண்டாவது சுற்றிலும் இந்த விற்பனை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்த வாய்ப்பினை நீங்கள் தவறவிட்டிருந்தால், இரண்டாம் சுற்று விற்பனை உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

வழக்கம்போல, அமேசானின் இரண்டாம் சுற்று ஃபெஸ்டிவல் சேலில் இருக்கக்கூடிய சிறப்பு அம்சங்களை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருப்போ,. இதனால் கிரேட் இண்டியன் சேல் தொடங்கியதும் கேட்ஜெட்360 தளத்தை பார்த்துக் கொண்டே இருங்கள்.
 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com