"#BoycottAmazon" என்ற ஹேஷ்டேக்-ஐ பதிவிட்டும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சமூக வலைதளங்களில், வியாழக்கிழமை அன்று அதிகமாக சாடப்பட்டது அமேசான் நிறுவனம். காரணம் என்னவென்றால், டாய்லெட் சீட் கவர்கள், ஷூ, தரை விரிப்புகள் போன்றவற்றில், இந்து கடவுள்களின் படங்களை பதித்து விற்பனை செய்ததுதான். மேலும், இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் விற்பனை பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்களது ட்விட்டர் பக்கங்களில், இந்த அமெரிக்க நிறுவனத்தை புறக்கணிக்கக் கூறி பதிவுகளை இட்டபடியும் மேலும், "#BoycottAmazon" என்ற ஹேஷ்டேக்-ஐ பதிவிட்டும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது, இந்தியாவில் இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்காக உள்ளது. மேலும் சிலர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்-ஐ தங்கள் பதிவுகளில் டேக் செய்து, இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேண்டியுள்ளனர்.
இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தங்களுடைய தளத்திலிருந்து, அந்த மாதிரியான பொருட்களை நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளது.
"அனைத்து விற்பனையாளர்களும் தங்களுடைய நிறுவனத்தின் விற்பனை விதிகளை பின்பற்ற வேண்டும், அப்படி பின்பற்றாதவர்களின் கணக்குகள், உடனடியாக, தளத்திலிருந்து நீக்கப்படும்" என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே மாதிரியான ஒரு சம்பவம், 2017-ல் நடந்துள்ளது. அப்போது அமேசானின் கனடா நாட்டு தளத்தில், கால்மிதிகளில், இந்திய நாட்டு கொடி போன்ற ஒரு கால்மிதியை விற்பனைக்கு வைத்திருந்தது. அப்போது இதே வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்த கால்மிதிகளை தளத்திலிருந்து நீக்கப்படவில்லையெனில், அனைத்து அமேசான் ஊளியர்களின் விசாக்களும் ரத்து செய்யப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து, அந்த கால்மிதிகள் தளத்திலிருந்து நீக்கப்பட்டன.
© Thomson Reuters 2019