Photo Credit: Facebook/ UIDAI
தனி நபர் அடையாள ஆணையம் UIDAI-யின் ஆதார் சாப்ட்வேரை ஹேக் செய்து, அதிலிருந்து பொதுமக்களின் ஆதார் விவரங்களை திருட உதவும் சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த ஹேக்கிங் சாப்ட்வேர்கள் வெறும் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஆதார் தகவல்கள் திருட்டு போவதாக கூறப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக அரசும் ஆதார் ஆணையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. எனினும், ஆதார் அடையாள அட்டையின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைக்கவில்லை
இந்நிலையில், இணைய நிறுவனங்களின் பாதுகாப்பை உடைக்க பயன்படுத்தப்படும் ஒரு பிரத்யேக 'பேட்ச்’ சாப்டவேர் மூலம் ஆதார் விவரங்களை திருடலாம் என ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. ரூ.2500க்கு கிடைக்கும் அந்த சாப்டவேர், UIDAIன் பாதுகாப்பை உடைத்து, பொதுமக்களின் ஆதார் விவரங்களை காண பயன்படுகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு இணைய நிபுணர்கள் மூலம் அந்த பேட்ச் சாப்டவேரை ஆய்வு செய்து, ஆதார் விவரங்களின் பாதுகாப்பு உடைக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக ஹஃபிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது.
ஆதார் விவரங்களை பொதுமக்களிடம் இருந்து பெறும் மையங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேரை இந்த பேட்ச் மூலம் திருடலாம். மேலும், எந்த ஆதார் மையம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்துகிறது என்பதை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சேவையையும் இந்த பேட்ச் மூலம் செயல் இழக்க செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பேட்ச் மூலம், எந்த நாட்டில் உள்ளவர்களும், ஆதார் பாதுகாப்பை எளிதாக உடைக்க முடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்
இதுகுறித்து UIDAI கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ஹஃபிங்டன்போஸ்ட் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்