1080p வீடியோ க்ளாரிட்டி கொண்ட இந்த பாதுகாப்பு கேமரா 130 டிகிரி பரந்த கோணம் கொண்ட லென்ஸை பயன்படுத்துகிறது
Photo Credit: எம்ஐ.காம்
எம்ஐ.காம் வலைதளத்தில், இந்த கேமரா குறைந்த விலையில் வெளியாகிறது.
சியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்து டீசரை நேற்று வெளியிட்டது. இந்நிலையில் இன்று அந்நிறுவனம் சார்பாக எம்ஐ ஹோம் செக்கியூரிட்டி கேமரா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
‘நெவர் டேக் யுவர் ஐஸ் ஆஃப்' என்ற பன்ச் லைனுடன் நேற்று டீசர் வெளியாகிய நிலையில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த கேமரா. ஏற்கெனவே ரூபாய் 2,699க்கு எம்ஐ ஹோம் செக்கியூரிட்டி கேமராக்கள் இந்தியாவில் விற்பனையாகும் என எதிர்பார்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூபாய் 2,299 க்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறிமுக விலையாக எம்ஐ.காமில் ரூபாய் 1,999க்கு இந்த செக்கியூரிட்டி கேமரா விற்பனையாக உள்ளது. நாளை (பிப்ரவரி 14 ஆம் தேதி) மதியம் சுமார் 12 மணி அளவில் அந்த தயாரிப்பு விற்பனையை தொடங்கப்பட உள்ளது. மேலும் வாடிக்கையாளர்க்கு இந்த சேலை நினைவூட்ட நோடிஃபிக்கேஷன் வசதியை அறிமுகம் செய்துள்ளது எம்.ஐ.
1080p வீடியோ க்ளாரிட்டி கொண்ட இந்த பாதுகாப்பு கேமரா 130 டிகிரி பரந்த கோணம் கொண்ட லென்ஸை பயன்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு, இன்ஃப்ரா ரெட் இரவு பார்வை, இரண்டு வழி ஆடியோ பதிவு மற்றும் பாதுகாப்பான சேமிப்பு வசதி போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது இந்த கேமரா.
மேலும் பிக்சர் இன் பிக்சர் எனப்படும் புதிய மல்டி டாஸ்கிங் அமைப்பையும் முன்னணி ஐபோன் மற்றும் அண்ட்ராய்டு மாடல் போன்களில் எம்.ஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter