ரெட்மி டிவி கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் அதன் விலையில் சில சுவாரஸ்யமான சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தது.
Redmi TV 70 தொலைக்காட்சி 70-இன்ச் 4K HDR திரையை கொண்டுள்ளது.
சியோமி இந்தியாவில் தனது ஸ்மார்ட் ஹோம் போர்ட்ஃபோலியோவை மெதுவாக விரிவுபடுத்தி வருகிறது, ஸ்மார்ட் பல்புகள் முதல் வாழ்க்கை முறை தயாரிப்புகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் வரை பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. நிறுவனம் இப்போது இந்தியாவில் ஒரு புதிய தயாரிப்பின் வருகையை டீசர் செய்யத் தொடங்கியுள்ளது, இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Redmi TV 70 ஆக இருக்கலாம். அதிகாரப்பூர்வ சியோமி இந்தியா ட்விட்டர் கணக்கு இரண்டு ட்வீட்களை பதிவிட்டுள்ளது, அந்த ட்வீட் செப்டம்பர் 17 அன்று ஒரு நிகழ்வில் இந்தியாவில் Redmi TV 70 அறிமுகப்படுத்தப்படலாம் என்று பரிந்துரைக்கிறது. தனித்தனியாக, பெங்களூரில் ஒரு வெளியீட்டு நிகழ்வுக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளது. சீன நிறுவனம் ஏற்கனவே Mi LED வரம்பின் கீழ் நாட்டில் பரவலான ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்து வருகிறது.
அதிகாரப்பூர்வ சியோமி இந்தியா ட்விட்டர் கணக்கு ஒரு டிவியாகத் தோன்றுவதைக் காட்டும் டீஸரைப் பகிர்ந்துள்ளது, மேலும் செப்டம்பர் 17 ஆம் தேதி 'ஸ்மார்ட்டர் லிவிங் 2020' வெளியீட்டு தேதியை முக்கியமாகக் குறிப்பிடுகிறது. சியோமி இன்னும் தயாரிப்பின் பெயரை வெளியிடவில்லை என்றாலும், அந்த படம் காட்டும் மெல்லிய பெசல்களைக் கொண்ட டிவி, Redmi TV 70-யாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணக்கின் மற்றொரு ட்வீட் இந்த மாத இறுதியில் பல ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கிறது.
ரெட்மி டிவி 70-இன்ச் 4K திரை, HDR வசதி ஆகியவற்றுடன் சுவற்றில் மாட்டுவது அல்லது டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுக்கு ஏதுவான பேசல்களுடனே அறிமுகமாகியுள்ளது. இந்த ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டே இயங்குகிறது. 2GB RAM மற்றும் 16GB சேமிப்பை கொண்ட இந்த ரெட்மி டிவி குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் SoC (64-bit Amlogic SoC) ப்ராசஸரை கொண்டே இயங்குகிறது. Dolby Audio மற்றும் DTS HD போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.
இணைப்பு வசதிகளை பொருத்தவரை வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு USB போர்ட்கள், மூன்று HDMI போர்ட்கள், AV input, என பல வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் அளிக்கிறது சியோமி நிறுவனம். முன்னதாக, சியோமி நிறுவனம் Mi TV வரிசையில் 22 ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டிவி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. செப்டம்பர் 3ல் முதல் விற்பனையும் செய்தது. இந்த டிவி சீனாவில் 3,799 யுவான்கள் (சுமார் 38,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையானது. இந்த அறிவிப்புகளின் மூலம், இந்த முதல் ரெட்மி டிவியின் சீனாவை தாண்டிய இந்திய அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro Series Colourways and Memory Configurations Listed on Amazon
BSNL Bharat Connect Prepaid Plan With 365-Day Validity Launched; Telco's BSNL Superstar Premium Plan Gets Price Cut