அமேசான் மெதுவாக தனது தயாரிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. இதுவரை வெளியான எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் ஃப்யர் டிவி ஸ்டிக் விற்பனையில் அசத்திய நிலையில் தற்போது தனது தயாரிப்பான 'அமேசான் எக்கோ ஷோ' என்னும் ஸ்மார்ட் திரைகொண்ட10 இஞ்ச் டால்பி-ஸ்பீக்கர்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்பீக்கர்கள் ரூ.22,999க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரண்டாம் தலைமுறை - அமேசான் எக்கோ ஷோ கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகமானது. அங்கு வெளியாகிய சில மாதங்களிலேயே இந்தியாவிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்பீக்கர் அமேசான் எக்கோ ஸ்பாட் தயாரிப்பைப் போல வட்டமான 2.5 இஞ்ச் திரையைக் கொண்டுள்ளது.
அமேசான் எக்கோ ஷோ-வில் 10-இஞ்ச் ஹெச்டி திரை இருப்பதனால், ஆடியோ மற்றும் வீடியோ கன்டென்ட்களை நம்மால் ரசிக்க முடிகிறது. மேலும் இதில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட், வீடியோ போன் அழைப்புகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பாதுகாப்பு கோமராக்களையும் இணைத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும் .
இந்த தயாரிப்பில் டால்பி-ஸ்பீக்கர்கள், புளூடூத் கனெக்டிவிட்டி, வைஃ-ஃபை மற்றும் பல முக்கிய தொழில்நுட்பங்களை உள்ளன. இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள 8 மைக்ரோ போன்கள் துல்லியமாக நாம் கொடுக்கும் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும். மேலும் இதில் இடம் பெற்றுள்ள 5 மெகா பிக்சல் கேமரா வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
அமேசான் எக்கோ ஷோ தயாரிப்பைப் பயன்படுத்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களை பார்க்க முடிகிறது. மேலும் ஃபேஸ்புக், அமேசான் பிரைம் மியூசிக், ஜியோ சாவன் போன்ற பல தயாரிப்புகளை இந்த அமேசான் எக்கோ ஷோவில் நம்மால் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாரு இந்த அமேசான் எக்கோ ஷோ தயாரிப்பை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். கேப் புக் செய்வது முதல் சமையல் குறிப்புகள் வரை எல்லாவற்றயையும் இதில் நம்மால் செய்ய முடியும்.
அமேசான் எக்கோ ஷோ இந்தியாவில் அறிமுகமாகிய நிலையில், இதை வாங்குபவர்களுக்கு பிலிப்ஸ் ஹூ ஸ்மார்ட் லைட் பல்பு இலவசமாக கிடைக்கிறது. மேலும் இதை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை கொண்டு வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்