அதிசயமாக பப்ஜி மற்றும் ஃவோர்ட்நையிட் ஆகிய பிரபல கேம்கள் இந்த பட்டியலில் முதல் இடம் பிடிக்கவில்லை.
ட்விட்டர் சமிபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி கேம் தொடர்புடைய ட்வீட்டுக்கள் மட்டுமே சுமார் 1 பில்லியன் வரை 2018 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தது. இதைதொடர்ந்து 2018 ஆம் அண்டின் சிறந்த 10 கேம்களின் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது.
ஆனால் இதில் வியப்பளிக்கும் விதமாக பப்ஜியோ அல்லது ஃவோர்ட்நையிட் கேம்மோ முதலிடத்தை பிடிக்கவில்லை. மாறாக ஜப்பானை சேர்ந்த சோனி நிறுவனத்தின் கிளை நிறுவனமான அனிபெளக்ஸ் மற்றும் டிலையிட் வர்க்ஸ்ஸ நிறுவனம் இனைந்து தயாரித்த ஃவேட் கிராண்ட் ஆடர் என்னும் கதாபித்திரத்தை ஏற்று விளையாடும் கேம் முதலிடத்தை பிடித்தது.
மேலும் ஜப்பான் தவிர அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டூமே பதிவிறக்கம் செய்ய முடிகின்ற இந்த கேம் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட கேம்களின் பட்டியலில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2018-ன் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட கேம்கள்
1. ஃவேட் கிராண்ட் ஆடர்
2. ஃவோர்ட் நையிட்
3. மான்ஸ்டர் ஸ்டிரையிக்
4. ஸ்பிளாடூன்ன 2
5. பப்ஜி
6. கிரான்புளூ ஃவ்வான்டசி
7. என்செம்பிள் ஸ்டார்ஸ்
8. சூப்பர் ஸ்மாஷ் பிரதர்ஸ்
9. ஓவர்வாட்ச் 10. ஃவைனல் ஃவ்வான்டசி
ஃவேட் கிராண்ட் ஆடர் கேம்யின் சாதணை ட்விட்டரில் மட்டுமில்லாமல் 2 பில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்த கேம் என்னும் சாதணையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2 பில்லியன் டாலர் வசூலில் 97 சதவிகுதம் ஜப்பானில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Mark OTT Release Date: When and Where to Watch Sudeep Sanjeev’s Action Thriller Online?
Sarvam Maya OTT Release: Know Everything About This Malayalam Fantasy Drama Film
Valve Changes AI Disclosure Guidelines on Steam for Game Developers