இந்த அப்டேட் மூலம் ‘வீக்கண்டி ஸ்நோ மேப்’ (Vikendi Snow Map) விளையாட்டில் சேர்க்கப்படும்
தற்போது மிகவும் பிரபலமாகி வரும் பப்ஜி போன் விளையாட்டிற்க்கு புதிதாக ஓர் அப்டேட் வந்துள்ளது. 0.10.0 என்றழைக்கப்படும் இந்த அப்டேட் அண்டிராய்டு மட்டும் ஐ.ஓ.எஸ் அப்பிலிகேஷன்களில் கிடைக்கும். இந்த அப்டேட் மூலம் ‘வீக்கண்டி ஸ்நோ மேப்' (Vikendi Snow Map) விளையாட்டில் சேர்க்கப்படும்.
பனிபொழிவே இந்த அப்டேட்டின் சிறப்பம்சம். மேலும் இந்த அப்டேட்டுடன் விளையாட்டு வீரர்களுக்கு, சந்தேகத்துக்குறிய வகையில் யாராவது விளையாடினால் அவர்களை ரிப்போர்டு செய்ய முடியும். மேலும் ஆயுதங்களை வைத்துக்கொள்ளும் சிறப்பு அம்சத்தை பப்ஜி, இந்த அப்டேட் மூலம் அறிமுகபடுத்தியுள்ளது. இதன் மூலம் விளையாட்டில் புதிதாக ஆட்களை கொல்ல சக்தி கிடைக்கிறது.
பப்ஜி பிரியர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்த அப்டேட், அண்டிராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்ய 1.6 ஜிபி யும், ஐ.ஓ.எஸ்-ல் பெற 2.1 ஜிபியும் டேட்டாவும் தேவைப்படும்.
PUBG மொபைல் 0.10.0 வீக்கிண்டி ஸ்நோ மேப் புதுப்பிப்பு இணைப்பு குறிப்புகள்
கடந்த டிசம்பர் 20 வெளியான இந்த புதிய அப்டேட்டில் பனி வரைப்படம் போன்ற புதிய அம்சங்கள் இருப்பதால் பப்ஜி பிரியர்களிடம்மிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்