குழந்தைகள் மனதில் வன்முறையைத் தூண்டுகிறது - நேபாளத்தில் பப்ஜி கேம்மிற்கு தடை

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 12 ஏப்ரல் 2019 13:11 IST

பப்ஜி விளையாட்டின் உள்ளடக்கம் வன்முறையைத் தூண்டுகிறது

பிரபலமான ஆன்லைன் விளையாட்டான பப்ஜி நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பப்ஜி விளையாட்டின்  உள்ளடக்கம் குழந்தைகளுக்கு எதிர்மறையான வன்முறையை தூண்டக்கூடிய வகையில் இருப்பதாக அதிகாரியொருவர் கூறியுள்ளார். இந்த பப்ஜி விளையாட்டில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் மிகவும் அடிமைப்பட்டுள்ளனர் என்று நேபாள தொலைத் தொடர்பு அதிகாரியான சந்திப் அதிகரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த தடை இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. 

ஹிமாலயன் தேசிய கூட்டாட்சி விசாரணை அதிகாரியிடம் இருந்து வந்த வேண்டுகோளைத் தொடர்ந்து அனைத்து இணைய சேவை வழங்குநர்கள், மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் நெட்வொர்க் சேவை வழங்குபவர்கள் வியாழக்கிழமை முதல் பப்ஜி விளையாட்டு ஸ்ட் ரிமிங்கை தடுக்க தடை விதித்துள்ளது. 

2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுகளில் பப்ஜி விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த மொபைல் கேம்ஸை டென்செண்ட் கேம்ஸ்க்கு உரிமையான லைட்ஸ்பீடு மற்றும் க்வாண்டம் ஸ்டூடியோ உருவாக்கியது. பப்ஜி விளையாட்டு உயிர்வாழ்வதற்காக பின்னணியில் நிகழும் போர் விளையாட்டு. இந்த விளையாட்டை ஆன்லைனின் 12 பேர் இணைந்து விளையாட முடியும். ஒருவரையொருவர் போராடி பிறரை வெளியேற்றுவதுதான் இந்த விளையாட்டின் அம்சமாக உள்ளது.

இந்த விளையாட்டினால் எந்தவொரு துயர்மிகு சம்பவம் நடைபெறவில்லை. மாறாக பெற்றோர்கள்கு, குழந்தைகளின் படிப்பு கெடுவதாலும்  அன்றாட வேலைகளைக் கூட பாராமல் விளையாட்டில் ஈடுபடுவதாகவும் கவலை தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதிகாரி தெரிவித்தார். 

Written with inputs from Reuters


If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PUBG, Nepal, PUBG Mobile

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone Air 2: 2026-ல் அதிரடி லான்ச்! லீக்கர் கொடுத்த ஷாக் நியூஸ்!
  2. லீக்கான நேரடிப் புகைப்படங்கள் OnePlus Turbo First Look: 9000mAh பேட்டரி மற்றும் மாஸ் டிசைன்!
  3. Motorola Signature Series: பிளிப்கார்ட்டில் அதிரடி டீஸர்!
  4. Samsung Galaxy A07 5G: முன்னெப்போதும் இல்லாத பெரிய பேட்டரி வசதி!
  5. Oppo K15 Turbo Pro: 50MP கேமரா மற்றும் ஆக்டிவ் கூலிங் ஃபேன் - முழு விவரம்
  6. S25 Ultra வாங்க இதுதான் சரியான நேரம்! Flipkart-ல் அதிரடி விலை குறைப்பு + பேங்க் ஆஃபர்ஸ்
  7. HMD-யிடமிருந்து பட்ஜெட் விலையில் செம்ம தரமான TWS ஆடியோ சீரிஸ்! எக்ஸ்50 ப்ரோ முதல் பி50 வரை... முழு விவரம் இதோ
  8. ஸ்மார்ட்வாட்ச் உலகிற்குப் புதிய ராஜா வர்றாரு! Xiaomi Watch 5-ல் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ முழு விவரம்
  9. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஒரு ஜாக்பாட்! ? Nord 4 இப்போ செம்ம மலிவான விலையில Amazon-ல் கிடைக்குது
  10. ஒப்போ ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Find X8 Pro விலையை ₹19,000 வரை குறைச்சிருக்காங்க. இந்த டீலை விடாதீங்க மக்களே
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.