Photo Credit: Tencent
இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டுள்ளது.
தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 117 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதில் பிரபல விளையாட்டு ஆப்பான பப்ஜியும் அடங்கும். இளைஞர்களின் மத்தியில் பிரபலான இந்த பப்ஜி ஆப்பானது, ஊரடங்கு காலத்தில் மட்டும் 17.5 கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் பப்ஜியை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.
இந்தநிலையில், தற்போது பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கனவே பப்ஜியை பதிவிறக்கம் செய்தவர்கள், தொடர்ந்து விளையாடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதனை அப்டேட் செய்ய முடியாது.
இதற்கு முன்பு டிக்டாக் தடை செய்யப்பட்ட போது, இந்தியாவில் அதன் சர்வரும் நிறுத்தப்பட்டது. இதனால் டிக்டாக் தடைக்குப் பிறகு, அதை ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்களும் பயன்படுத்த முடியாமல் போனது. அதே போல், பப்ஜியின் சர்வர் நிறுத்தப்படும் வரையில், அதை இன்ஸ்டால் செய்திருப்பவர்கள் தொடர்ந்து விளையாட முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்