கடந்த செவ்வாய்கிழமையன்று பப்ஜி கேமை தடை செய்ய கோரி குஜராத் அரசு அதிரடி உத்திரவை பிரப்பித்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு இத்தடை உத்திரவுகளை மாநில அரசு அனுப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ஜமூ மற்றும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் சங்கம் அங்குள்ள மாணவர்களின் படிப்பு பப்ஜி கேமால் தொடர்ந்து பாதிப்பதாகவும் அதனால் அக்கேமிற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என மனு அளித்தனர். இந்த வேண்டுகோளை தொடர்ந்து மாணவர்களிடையே மிகவும் பிரபலமான இந்த பப்ஜி கேமிற்கு தடைவிதிக்க குஜராத் அரசாங்கம் மூன்எச்சரிக்கை நடவெடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த தடையை குஜராத் அரசு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த தீர்மானித்துள்ளது. இதைதொடர்ந்து நாடுமுழுவதும் இந்த ஆன்லையின் கேமிற்கு தடைவிதிக்க கோரி குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் இதன் மூலம் நாடு முழுவதும் பப்ஜி கேமிற்கு தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.
இந்த தடை உத்திரவை உடனடியாக ஆரம்பபள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என முதன்மை பள்ளி அதிகாரிகளுக்கு வந்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தகைய தடைகள் மிகவும் அவசியம் என்னும் இல்லையெனில் மாணவர்கள் இதற்கு அடிமையாகி விடுவார்கள் என அரசு சார்பில் நம்பப்படிகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தடை அறிவிப்பில் இந்த தடை பப்ஜி மொபையுலுக்கா அல்லது பப்ஜி கணிக்கா என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ‘குழந்தைகள் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய ஆணையம் (தி நேஷ்னல் கமிஷன் ஃவார் புரோடெக்ஷன் ஆப் ச்சையில்டு ரையிட்ஸ் (என்.சி.பி.சி.ஆர்) தான் இந்த தடை உத்திரவை நாடு முழுவதும் அமல் படுத்த மூடிவெடுத்துள்ளதாக' குஜராத் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் ஆணையத்தின் தலைவர் ஜக்குருத்தி பாண்டியா தெரிவித்தார்.
2018 ஆம் அண்டின் தொடக்கத்தில் அறிமுகமான இந்த ஆன்லையின் கேம் கடந்த ஆண்டு மட்டுமே சரியாக 200 மில்லியன் டவுண்லோடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Written with inputs from PTI
If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்