நாடு முழுவதும் தடை செய்யப்படுமா பப்ஜி..குஜராத்தில் தீடிர் தடை உத்திரவு!

பப்ஜி கேமிற்கு தடைவிதிக்கும் படி ஆரம்பநிலை பள்ளிகளுக்கு குஜராத் அரசு அதிரடி!

நாடு முழுவதும் தடை செய்யப்படுமா பப்ஜி..குஜராத்தில் தீடிர் தடை உத்திரவு!

மாணவர்கள் இந்த கேமிற்கு மிகவும் அடிமையாகிவிட்டதாகவும் இதனால் படிப்பில் கவனம் குறைகிறது என்ன தொடர்ந்து புகார்கள் வந்ததால் அரசு நடவெடிக்கை

ஹைலைட்ஸ்
  • ஆரம்பநிலை பள்ளிகளில் பப்ஜி கேமிற்கு தடைவித்த குஜராத் அரசு
  • பப்ஜி தடை மோபையில் போனுக்கானதா என்பது இன்னும் தெரியப்படவில்லை
  • கணினி பப்ஜி கேம்களுக்கு இந்த தடை பொருந்துமா என இன்னும் அறியவில்லை
விளம்பரம்

கடந்த செவ்வாய்கிழமையன்று பப்ஜி கேமை தடை செய்ய கோரி குஜராத் அரசு  அதிரடி உத்திரவை பிரப்பித்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு இத்தடை உத்திரவுகளை மாநில அரசு அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஜமூ மற்றும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் சங்கம் அங்குள்ள மாணவர்களின் படிப்பு பப்ஜி கேமால் தொடர்ந்து பாதிப்பதாகவும் அதனால் அக்கேமிற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என மனு அளித்தனர். இந்த வேண்டுகோளை தொடர்ந்து மாணவர்களிடையே மிகவும் பிரபலமான இந்த பப்ஜி கேமிற்கு தடைவிதிக்க குஜராத் அரசாங்கம் மூன்எச்சரிக்கை நடவெடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இந்த தடையை குஜராத் அரசு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த தீர்மானித்துள்ளது. இதைதொடர்ந்து நாடுமுழுவதும் இந்த ஆன்லையின் கேமிற்கு தடைவிதிக்க கோரி குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் இதன் மூலம் நாடு முழுவதும் பப்ஜி கேமிற்கு தடைவிதிக்கப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.
 

Call for PUBG ban across the country

 

இந்த தடை உத்திரவை உடனடியாக ஆரம்பபள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என முதன்மை பள்ளி அதிகாரிகளுக்கு வந்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தகைய தடைகள் மிகவும் அவசியம் என்னும் இல்லையெனில் மாணவர்கள் இதற்கு அடிமையாகி விடுவார்கள் என அரசு சார்பில் நம்பப்படிகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தடை அறிவிப்பில் இந்த தடை பப்ஜி மொபையுலுக்கா அல்லது பப்ஜி கணிக்கா என தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ‘குழந்தைகள் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய ஆணையம் (தி நேஷ்னல் கமிஷன் ஃவார் புரோடெக்ஷன் ஆப் ச்சையில்டு ரையிட்ஸ் (என்.சி.பி.சி.ஆர்) தான் இந்த தடை உத்திரவை நாடு முழுவதும் அமல் படுத்த மூடிவெடுத்துள்ளதாக' குஜராத் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் ஆணையத்தின் தலைவர் ஜக்குருத்தி பாண்டியா தெரிவித்தார்.

2018 ஆம் அண்டின் தொடக்கத்தில் அறிமுகமான இந்த ஆன்லையின் கேம் கடந்த ஆண்டு மட்டுமே சரியாக 200 மில்லியன் டவுண்லோடுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Written with inputs from PTI


If you're a fan of video games, check out Transition, Gadgets 360's gaming podcast. You can listen to it via Apple Podcasts or RSS, or just listen to this week's episode by hitting the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

#சமீபத்திய செய்திகள்
  1. ஆஃபர் முடியுறதுக்குள்ள செக் பண்ணுங்க! Huge Discount on Samsung Galaxy S25 Plus 5G: Rs 31,700 Off on Amazon India
  2. லீக்கான மிரட்டல் தகவல்கள்Oppo Find X9 Ultra Leak: Dual 200MP Periscope Cameras Confirmed?
  3. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  4. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  5. ஜனவரி லான்ச் உறுதி! Poco M8 and M8 Pro India Launch: Everything We Know So Far
  6. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  7. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  8. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  9. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  10. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »