இந்த விளையாட்டு, கணினி (PC), PS4, ஸ்டேடியா (Stadia), மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) ஆகிய அனைத்திலும் வெளியாகவுள்ளது.
Photo Credit: Square Enix/Marvel
இரண்டு வருடங்களுக்கு பிறகு இறுதியாக ஸ்கொயர் இனிக்ஸ் (Square Enix) தனது, 'மார்வல் அவெஞ்சர்ஸ் கேம்' கேம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்காக ஒரு முழு நீள ட்ரெய்லரை பயன்படுத்திக்கொண்ட ஸ்கொயர் இனிக்ஸ் நிறுவனம், அதன் இறுதி நிமிடங்களில், இந்த விளையாட்டு மே மாதம் 2020-ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. ஒரு சினிமா கதை, அந்த கதை களத்தை அடிப்படையாக கொண்ட இந்த விளையாட்டு, இதை தனியாகவும் விளையாடலாம் அல்லது கூட்டாகவும் விளையாடலாம் என அறிவித்துள்ளது இந்த நிறுவனம். கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், ப்ளாக் விடோ, தோர், ஹல்க் என்று முதல் அவெஞ்சர்களை கொண்டுள்ள இந்த விளையாட்டின் ட்ரெய்லர் நீளம் 3:18 நிமிடங்கள். இந்த நேரத்தில் என்னென்ன தகவல்களை அளித்துள்ளது, எவற்றில் எல்லாம் விளையாடலாம், முழு தகவல்களை தெரிந்துகொள்ளலாமா?
ஒரு சிரிய ஜெட் வகை விமானம், அவெஞ்செர்ஸ் டவரை வட்டமிடுவது போன்று துவங்குகிறது, இந்த ட்ரெய்லர். அந்த விமானம் ஒரு இடத்தில் தரை இறங்குகிறது. அது தரை அல்ல, அவவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில் கேப்டன் அமெரிக்காவையும் ஹல்கையும் சிலிர்க்க வைத்த கடல் மற்றும் வான் என இரண்டிலும் பயணிக்கு ஒரு ஹைடெக் கப்பல். அன்று ஒரு சிறப்பு நாள், 'அவெஞ்செர்ஸ் டே' கொண்டாட்டம், அந்த கப்பலில் தான் கொண்டப்படுகிறது. பின் அய்ர்ன் மேன், தோர், கேப்டன் அமெரிக்க மற்றும் ப்ளாக் விடோ, ஹல்க் என ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களின் அறிமுகம். மீண்டும் கொண்டாட்டம், கொண்டாட்ட மேடையில் நின்றுகொண்டிருக்கும் தோர், கேப்டன் அமெரிக்க ப்ளாக் விடோ மற்றும் ஹல்க், அதிரடியாக என்டரி தரும் அயர்ன் மேன் என இந்த ட்ரெய்லர் பயணிக்கிறது.
கொண்டாட்டம் துவங்கியது, அதே நேரத்தில் தூரத்தில் ஒரு குண்டு வெடிப்பும் துவங்கியது. முதலில் அயர்ன் மேன் மற்றும் தோர் விரைகின்றனர். ப்ளாக் விடோ கேப்டன், ஹல்க் பின் இணைகின்றனர். இங்கு 'கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர்'(Captain America: The Winter Soldier) மற்றும் 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' (Captain America: Civil War) ஆகியவற்றின் குறியீடுகள். வருகிறார்கள் 'ஹைட்ரா'-வை சேர்ந்தவர், ஹல்கின் அட்டகாசம், ப்ளாக் விடோவின் சாமர்த்தியம், தோரின் தடலடி, கேப்டன் அமெரிக்காவின் தனித்துவமான கேடயத்தை வீசும் காட்சி, அய்ர்ன் மேனின் வழக்கமான திட்டமிடாத கேஷு என அதிரடியாக நகர்கிறது ட்ரெய்லரின் அந்த பாகம்.
அந்த காட்சி முடியும் நிலையில் மீண்டும் அந்த ஹைடெக் கப்பல், அந்த கப்பலின் உள் கேப்டன் அமெரிக்க இருப்பது பொன்ற காட்சி. அனைவரும் பார்வையும் ஒரு விதமான பதட்டத்துடன் அந்த கப்பலின் மேல் தான் இருக்கிறது. அந்த கப்பலினுள், ஒரு சக்தியை வெளியேற்றும் நீல நிற 'கிரிஸ்டல்' கல், டெசரேக்ட் போல் அல்ல. திடிரென்று அந்த கல் வெடிக்கிறது, கதவுகள் மூடுகின்றன, இருள் சூழ்கிறது.
மீண்டும் ஒளி வருகையில், சிதைந்த நிலையில் தோற்றமளிக்கிறது இந்த உலகம். 'அந்த நாளில் நாங்கள் இழந்தவர்களின் நினைவாக' என்று ஒரு நினைவுச்சின்னம். அதில் பலரது புகைப்படங்களுடன், 'நாங்கள் உங்களை இழக்கிறோம்', 'மீண்டும் திரும்பி வாருங்கள்', என முதன்மையாக தெரியும் வாசங்கள். அதனை அடுத்து டோனி ஸ்டார்க்ம், ப்ரூஸ் பேனரிடம் அக்ரோசமாக கத்தும் காட்சி, இவை அனைத்தும் நமக்கு 'அவெஞ்செர்ஸ்: எண்ட் கேம்'-ஐ நினைவுப்படுத்திகிறது.
அதுபோல தான் இந்த விளையாட்டு இருக்குமா என்றால் இங்கு கதை வேறு. இந்த காட்சிகளை தொடர்ந்து, ஒரு பேரமைதியில் கேப்டன் அமெரிக்காவின் சிலை, அதன் கீழ் தோரின் சுத்தியல். எண்ட் கேமிலிருந்து முற்றிலும் வேறுபட்ட காட்சிகள். மீண்டும் சுத்தியலின் மேல் பார்வை, 'இந்த கதை இப்படியாக் முடியவில்லை' என்ற ஒலியுடன், சக்தியை வெளிப்படுத்தும், தோரின் சுத்தியல். அது தோரின் கைகளை அடைகிறது, மீண்டும் முதல் அவெஞ்சர்களின் சண்டை காட்சி, அவெஞ்சர்க்கு என்ற பிரத்யேகமான இசையில் முடிவு பெரும் ட்ரெய்லர்.
இந்த விளையாட்டு நமக்கு வேறு ஒரு அனுபவத்தை அளிக்கப்போகிறது என்பதை மட்டும் உறுதி.
இந்த ட்ரெய்லரின் முழு காட்சிகள் இதோ!
2020-ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த விளையாட்டு, கணினி (PC), PS4, ஸ்டேடியா (Stadia), மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) ஆகிய அனைத்திலும் வெளியாகவுள்ளது.
-முரளி சு
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
CES 2026: Asus ProArt PZ14 With Snapdragon X2 Elite SoC Launched Alongside Zenbook Duo and Zenbook A16
Lenovo Legion Go 2 SteamOS Version Revealed at CES 2026, Will Be Available From June 2026