Photo Credit: YouTube/ Mr.Ghost Gaming
PUBG Mobile மிகவும் பிரபலமான மொபைல் கேம்களில் ஒன்றாகும். இது விகேண்டியின் வரைபடத்தில் கடந்த வாரம் புதிய ஆர்க்டிக் மோடை சேர்த்தது. இப்போது அதன் அடுத்த பதிப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. PUBG மொபைலின் வரவிருக்கும் அடுத்த அப்டேட்டின் பதிப்பு 0.18.0 ஆகும். இது ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என்று வதந்தி பரப்பப்படுகிறது. மேலும், சில புதிய மோடுகளைக் கொண்டு வரக்கூடும். இது தவிர, டெவலப்பர்கள் மிராமர் வரைபடத்தின் புதிய பதிப்பை வரவிருக்கும் PUBG மொபைல் அப்டேட்டில் சேர்க்கப் போகிறார்கள் என்றும் வதந்தி பரவியுள்ளது. குறிப்பாக, இந்த மாற்றங்கள் ஏற்கனவே PUBG மொபைல் பீட்டாவில் உள்ளன.
ஃபோஸ்பைட்ஸின் அறிக்கையின்படி, PUBG மொபைல் 0.18.0 அப்டேட் ஏப்ரல் 24 அன்று வெளியிடப்படலாம். மேலும் இது 2 ஜிபி அளவை விட அதிகமாக இருக்கலாம். இந்த அப்டேட்டில் இருக்கும் புதிய அம்சங்களில், மிராமர் 2.0 என அழைக்கப்படும், மிராமர் வரைபடத்தின் புதிய பதிப்பும் இருக்கக்கூடும்.
இது தவிர, சேஃப்டி ஸ்கிராம்பிள் மோட் மற்றும் ஜங்கிள் அட்வென்ச்சர் கைடு மோடுடன் வேறு சில சிறிய மாற்றங்களையும் உள்ளடக்கியதாக வதந்தி பரவியுள்ளது. இருப்பினும் இந்த அம்சங்கள் ஏற்கனவே PUBG மொபைல் பீட்டா பதிப்பில் ஏப்ரல் 14 அன்று விளையாட்டின் நிலையான பதிப்பில் இருந்தது.
மிராமர் 2.0 வரைபடத்தில் ரேசிங் ரேம்ப் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. அதில் வாட்டர் சிட்டி என்று அழைக்கப்படும் புதிய பகுதி, கோல்டன் மிராடோ என்ற புதிய வாகனம் மற்றும் விற்பனை இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். இந்த விற்பனை இயந்திரங்கள் சுகாதார கருவிகள் மற்றும் ஆற்றல் பானங்கள் சேகரிக்க பயன்படுத்தப்படலாம். சேஃப்டி ஸ்கிராம்பிள் மோட் புதிய ஈவோ கிரவுண்ட் மோட் இருக்கக்கூடும்.
இதில் பாதுகாப்பான விளையாட்டு பகுதிக்குள் ஒரு ப்ளூ ஸோனும் இருக்கும். மேலும் வீரர்கள் இந்த புதிய ப்ளூ ஸோனிற்கு வெளியே இருக்க வேண்டும். அவர்கள் அதற்குள் வாழ்ந்தால், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இந்த அமைப்பு ஏற்கனவே PUBG-யின் பிசி பதிப்பில் Bluehole Mode உள்ளது.
இது சான்ஹோக் வரைபடத்தின் ஒரு பகுதியாக இருக்கும், மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றன. பிற மாற்றங்களில் சில புதிய முடிவுத் திரைகள், ஒரு புதிய பயிற்சி முறை, புதிய சாதனைகள், Win94 துப்பாக்கியில் scope ஆதரவு மற்றும் பல இருக்கலாம்.
0.18.0 அப்டேட்டை வெளியிடுவது குறித்து, இதுவரை PUBG மொபைல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே, நீங்கள் இந்த தகவலை ஒரு கசிவாக மட்டுமே எடுத்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்க வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்