இனி யூ-ட்யூபிலும் #ஹேஷ்டாக் பயன்படுத்தலாம் : புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்

விளம்பரம்
Ankit Chawla, மேம்படுத்தப்பட்டது: 19 ஜூலை 2018 18:09 IST
ஹைலைட்ஸ்
  • யூட்யூபிலும் ஹேஷ்டாக் தலைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இந்த வசதி இன்னும் ஐபோன்களுக்கு வெளியாகவில்லை
  • '#' என்ற சைன் பயன்படுத்தி ஹேஷ்டாக் உருவாக்கலாம்

சமூக வலைத்தள பயன்பாட்டில் தவிர்க்க முடியாத சொல் ஹேஷ்டாக். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் ப்ளஸ் வரை அனைத்து சமூக வலைகளிலும் ஹேஷ்டாக் பயன்பாடு வழக்கமாகிவிட்டது. இனி, யூட்யூபிலும் ஹேஷ்டாக் கொண்ட தலைப்புகள் பயன்படுத்தலாம்.

யூட்யூப் தலைப்புகளில் ஹேஷ்டாக் பயன்படுத்தி வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஹேஷ்டாக் பயன்படுத்தி அது சம்பந்தப்பட்ட மற்ற வீடியோக்களை இனி யூட்யூபில் எளிதாக காணலாம். இந்த வசதி இணையதளம், மொபைல் யூட்யூப் ஆப் இரண்டிலும் பயன்படுத்தலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது. மேலும், இந்த வசதி இன்னும் ஐபோன்களுக்கு வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

'#' என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ஹேஷ்டாக் உருவாக்கலாம். ஹேஷ்டாக் மூலம் குறிப்பிட்ட ஒரு தலைப்பு சம்பந்தமான மற்ற வீடியோக்களை எளிதாக காணலாம்.

ஹேஷ்டாக் பயன்படுத்தும் போது, எழுத்துக்களுக்கு நடுவில் இடைவெளி அளிக்கக் கூடாது. ஒரு வீடியோ பதிவில் 15க்கும் மேற்பட்ட ஹேஷ்டாக்குகள் இருக்க கூடாது போன்ற விதிமுறைகளை கூகுள் அறிவித்துள்ளது. 

தலைப்பிற்கு சம்பந்தமற்ற ஹேஷ்டாக்குகளை பயன்படுத்தினால், அவை நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. முறையற்ற, ஆபாசமான கண்டெண்ட் கொண்ட ஹேஷ்டாக் நீக்கப்படும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாத தொடக்கத்தில், யூட்யூபில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் யூட்யூப் பயன்பாட்டு வரலாறு ட்ராக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: YouTube
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  2. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  3. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  4. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  5. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  6. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  7. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  8. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  9. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  10. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.