சமூக வலைத்தள பயன்பாட்டில் தவிர்க்க முடியாத சொல் ஹேஷ்டாக். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் ப்ளஸ் வரை அனைத்து சமூக வலைகளிலும் ஹேஷ்டாக் பயன்பாடு வழக்கமாகிவிட்டது. இனி, யூட்யூபிலும் ஹேஷ்டாக் கொண்ட தலைப்புகள் பயன்படுத்தலாம்.
யூட்யூப் தலைப்புகளில் ஹேஷ்டாக் பயன்படுத்தி வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஹேஷ்டாக் பயன்படுத்தி அது சம்பந்தப்பட்ட மற்ற வீடியோக்களை இனி யூட்யூபில் எளிதாக காணலாம். இந்த வசதி இணையதளம், மொபைல் யூட்யூப் ஆப் இரண்டிலும் பயன்படுத்தலாம் என்று கூகுள் அறிவித்துள்ளது. மேலும், இந்த வசதி இன்னும் ஐபோன்களுக்கு வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
'#' என்ற குறியீட்டைப் பயன்படுத்தி ஹேஷ்டாக் உருவாக்கலாம். ஹேஷ்டாக் மூலம் குறிப்பிட்ட ஒரு தலைப்பு சம்பந்தமான மற்ற வீடியோக்களை எளிதாக காணலாம்.
ஹேஷ்டாக் பயன்படுத்தும் போது, எழுத்துக்களுக்கு நடுவில் இடைவெளி அளிக்கக் கூடாது. ஒரு வீடியோ பதிவில் 15க்கும் மேற்பட்ட ஹேஷ்டாக்குகள் இருக்க கூடாது போன்ற விதிமுறைகளை கூகுள் அறிவித்துள்ளது.
தலைப்பிற்கு சம்பந்தமற்ற ஹேஷ்டாக்குகளை பயன்படுத்தினால், அவை நீக்கப்படும் என்று அறிவித்துள்ளது. முறையற்ற, ஆபாசமான கண்டெண்ட் கொண்ட ஹேஷ்டாக் நீக்கப்படும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாத தொடக்கத்தில், யூட்யூபில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் யூட்யூப் பயன்பாட்டு வரலாறு ட்ராக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்