400க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
Photo Credit: Vi
இந்தியாவின் 3வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான Vodafone Idea நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய பொழுதுபோக்கு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Vi Movies and TV என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஆப் ஒரே இடத்தில் OTT மற்றும் லைவ் டிவி சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவை வழங்கி, கூடுதல் வருமானத்தைப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.
Vi Movies and TV ஆப் மூலம் 17க்கும் மேற்பட்ட பிரபலமான ஓடிடி தளங்களையும், 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் Vodafone Idea வாடிக்கையாளர்கள் பெற முடியும். பல ஓடிடி தளங்களுக்காக தனித்தனியே கட்டணம் செலுத்துவதை விட, ஒரே கட்டணத்தில் பலதரப்பட்ட பொழுதுபோக்கு சேவைகளைப் பெறும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி Live, ZEE5 போன்ற பிராந்திய OTT தளங்கள் உட்பட 17க்கும் மேற்பட்ட OTT சந்தா இலவசம். மேலும் மனோரமா மேக்ஸ் (மலையாளம்), நம்ம ஃபிலிக்ஸ் (கன்னடம்) மற்றும் ப்ளேஃப்ளிக்ஸ் கொரிய ஷோக்கள் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது. ஆஜ் தக், ஏபிபி நியூஸ், ரிபப்ளிக் போன்ற 350 நேரடி டிவி சேனல்களுக்கும், யூரோஸ்போர்ட், டிஎல்சி போன்ற பிரீமியம் லைஃப்ஸ்டைல் சேனல்களுக்கும் இதில் வருகிறது.
ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் இணையதளம் வழியாகவும் Vi Movies and TV ஆப்பை அணுகலாம். மேலும், ஒரே நேரத்தில் இரண்டு கருவிகளில் இருந்து ஓடிடி தளங்களில் இந்த ஆப் மூலம் படம் பார்க்க முடியும். பல்வேறு ஓடிடி தளங்களுக்காக தனித்தனியே கட்டணம் செலுத்துவதைத் தவிர்த்து, குறைந்த விலையில் ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெற Vi Movies and TV சிறந்த தேர்வாக இருக்கும் என Vodafone Idea நிறுவனம் தெரிவித்துள்ளது.
Vi Movies & TV Rs 154 Plan Details
இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் 16 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல 400+ லைவ் டிவி சேனல்களின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த சலுகைகளை மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
Vi Movies & TV Rs 202 Plan Details
இந்த திட்டத்தில் 13+ ஓடிடி ஆப்கள் மற்றும் 400+ டிவி சேனல்கள் சலுகை கிடைக்கிறது. அதேபோல 5 ஜிபி டேட்டா சலுகையையும் பெற்று கொள்ளலாம். டிவி மற்றும் மொபைலில் இந்த சலுகைகளை பெற்று கொள்ள முடியும்.
Vi Movies & TV Rs 248 Plan Details
இந்த திட்டத்தில் 6 ஜிபி டேட்டா வருகிறது. 400+ டிவி சேனல்கள் கிடைக்கிறது. 17 ஓடிடிகளை பயன்படுத்தலாம். ஓடிடி சலுகைகள் மற்றும் ஹாட்ஸ்டார் ஓடிடி கூடுதலாக வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series