டேர் டெவில்-க்கு நோ சொன்ன நெட்ஃபிளிக்ஸ்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
டேர் டெவில்-க்கு நோ சொன்ன நெட்ஃபிளிக்ஸ்!

மார்வெல்லின் டேர் டெவில் தொடரின் 4வது சீசன் இனி நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்
 • நெட்ஃபிளிக்ஸ் வியாழனன்று தனது நிறுவனத்தின் புதிய கொள்கைகளை அறிவித்தது.
 • முதல் சீசன் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸில் காணலாம்.
 • டேர் டெவிலினை இனி டிஸ்னி+ல் ஒளிபரப்பப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப் தொடரான டேர் டெவிலின் மூன்றாவது சீசன் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இருப்பினும் அடுத்து வரும் சீசன்கள் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மார்வெல்லின் பிற தயாரிப்புகளான அயர்ன் ஃபிஸ்ட் மற்றும் லூக் கேஜ் தொடர்களை நீக்கப்பட்டதை தொடர்ந்து டேர் டெவிலும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

டேர் டெவிலின் முதல் மூன்று சீசன்கள் நெட்ஃபிளிக்ஸில் தொடர்ந்து காணமுடியும். இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் கூறுகையில், மார்வெல்லின் டேர் டெவிலின் 4வது சீசன் நெட்ஃபிளிக்ஸில் இடம்பெறாது. டேர் டெவில் கடைசி சீசனை அடைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

நெட்ஃபிளிக்ஸில் இறுதி சீசன் ஒளிபரப்பாகாதது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இத்தனை வருடங்களாக எங்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தொடரின் இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

டேர் டெவிலின் 4வது சீசன் டிஸ்னி+ ல் ஒளிபரப்பாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த தகவல்களை மார்வெல் உறுதி செய்யவில்லை. தற்போது நெட்ஃபிளிக்ஸிலில் மார்வெல் நிறுவனத்தின் ஜெசிக்கா ஜோன்ஸ் மற்றும் பனிஷர் ஆகிய இரு தொடர்கள் மட்டுமே உள்ளன.

நெட்ஃபிளிக்ஸின் இந்த திடீர் முடிவுக்கு நியூயார்கில் அதிகரித்து வரும் வரி மற்றும் ஒரு சீசனில் குறைவான எபிசேடுகளை மட்டும் தயாரிக்க மார்வெல்லினை வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ஒன்பிளஸ் 8-ன் அடுத்த விற்பனை ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது!
 2. நோக்கியாவின் மூன்று புதிய போன்கள் அறிமுகம்!
 3. இன்பினிக்ஸ்-ன் இரண்டு ஸ்மார்ட்போன்கள் நான்கு பின்புற கேமராக்களுடன் அறிமுகம்!
 4. விவோ எக்ஸ் 50 சீரிஸின் விவரங்கள் கசிந்தன!
 5. பிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்!
 6. ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மீண்டும் எப்போது கிடைக்கும்?
 7. 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை அடுத்த வாரம் கொண்டு வருகிறது நோக்கியா!
 8. சாம்சங் இரண்டு புதிய போன்களை குறைந்த விலையில் கொண்டு வருகிறது!
 9. 20 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் இந்தியாவுக்கு வருகிறது Amazfit T-Rex!
 10. ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 விற்பனை ஒத்திவைப்பு!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com