ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் இனி கேம் விளையாடலாம்

விளம்பரம்
Written by Agence France-Presse மேம்படுத்தப்பட்டது: 20 ஜூன் 2018 16:20 IST
ஹைலைட்ஸ்
  • லைவ் வீடியோ கேமிங்கை அறிமுகப்படுத்துகிறது ஃபேஸ்புக்
  • லைவ் வீடியோ போலிங் வசதி வெளியிடுவதாக ஃபேஸ்புக் அறிவிப்பு
  • யூட்யூப் மற்றும் நெட்ஃபிளிஸுக்கு போட்டியாக இந்த வசதிகள் அறிமுகம்

கேம்கள், க்விஸ் போட்டிகள், போலிங் உள்ளிட்டவற்றை பேஸ்புக் தனது ஆன்லைன் வீடியோ வசதிகளில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.

இந்த வசதிகள் கொண்டு வரப்பட்டால், ஃபேஸ்புக் வீடியோவிலேயே கேம் விளையாட முடியும். நெட்ப்ளிக்ஸ், யூட்யூப் போன்ற நிறுவனங்களின் வீடியோ பதிவுகளுடன் போட்டியிட பேஸ்புக் நிறுவனம் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் வீடியோ வெளியிடுபவர்களுக்கு இந்த வசதியை பயன்படுத்தி, மக்களை தங்கள் வீடியோவோடு என்கேஜ் செய்ய முடியும்..

ஃபேஸ்புக் லைவ்விலும், கேம் விளையாடவும், வினா விடை போன்ற க்விஸ் போட்டிகளும் நடத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

“ஃபேஸ்புக் வீடியோக்கள் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், பயன்பாட்டாளர்கள், வீடியோவோடு தொடர்பு கொள்ளும் வகையில், இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என பேஸ்புக் தெரிவித்தது.

“லைவ் போலிங், ஆன்-டிமாண்ட் வீடியோ ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம், ஜாலியான, இன்டெராக்டிவ் வீடியோக்களை உருவாக்க முடியும்“ என்கிறது அந்நிறுவனம்.

சி.என்.என், ஃபாக்ஸ் செய்தி, ஏபிசி செய்தி, யூனிவிஷன் ஆகிய செய்தி நிறுவனங்கள் ஃபேஸ்புக்குடன் இணைந்து, சமூக வலைத்தளத்தில் நேரடி செய்தி தொகுப்புகளை தர உள்ளது.

இதன் மூலம், அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து வரும் செய்திகளும், வாடிக்கையாளர்கள் தயாரிக்கும் செய்தி வீடியோக்களும் ஆகிய இரண்டும் பேஸ்புக்கில் பயன்பாட்டிற்கு வருகின்றன.

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Netflix, YouTube, Facebook
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டைமன்சிட்டி 9500 சிப், 8,550mAh பேட்டரியுடன் ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள் இதோ
  2. 200MP கேமரா, 7025mAh பேட்டரியுடன் ஒப்போ ஃபைண்ட் X9s ப்ரோ அறிமுகம்: விலை மற்றும் முழு விவரங்கள்
  3. வாட்ஸ்அப் பிளஸ் சந்தா: இது என்ன, விலை, அம்சங்கள் மற்றும் நன்மைகள்
  4. விவோ X300 FE இந்திய அறிமுகத் தொகுப்பு: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. ஓப்போ என்கோ கிளிப் 2 மற்றும் வாட்ச் X3 மினி அறிமுகம்: 40 மணிநேர பேட்டரி மற்றும் ஓப்பன்-இயர் வடிவமைப்பு
  6. ஒப்போ F33 ப்ரோ 5G விமர்சனம்: ரூ. 40,000-க்கு கீழ் உள்ள மிகச்சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்மார்ட்போன் இதுதானா?
  7. ரெட்மி பட்ஸ் 8 அறிமுகம்: 50dB ANC மற்றும் 44 மணிநேர பேட்டரி பேக்கப் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்தியாவில் ரெட்மி A7 Pro 4G மற்றும் ரெட்மி A7 4G அறிமுகம்: Unisoc T7250 சிப்செட், விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  9. இந்தியாவில் விவோ போன்களின் விலை ரூ.4000 வரை உயர்வு: Vivo T5x, V70, Y31 5G ஆகியவற்றின் புதிய விலை விவரங்கள் இதோ
  10. மோட்டோரோலா ரேஸர் 2026, ரேஸர்+ 2026 அறிமுக தேதி, விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிவு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.