கேம்கள், க்விஸ் போட்டிகள், போலிங் உள்ளிட்டவற்றை பேஸ்புக் தனது ஆன்லைன் வீடியோ வசதிகளில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.
இந்த வசதிகள் கொண்டு வரப்பட்டால், ஃபேஸ்புக் வீடியோவிலேயே கேம் விளையாட முடியும். நெட்ப்ளிக்ஸ், யூட்யூப் போன்ற நிறுவனங்களின் வீடியோ பதிவுகளுடன் போட்டியிட பேஸ்புக் நிறுவனம் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கில் வீடியோ வெளியிடுபவர்களுக்கு இந்த வசதியை பயன்படுத்தி, மக்களை தங்கள் வீடியோவோடு என்கேஜ் செய்ய முடியும்..
ஃபேஸ்புக் லைவ்விலும், கேம் விளையாடவும், வினா விடை போன்ற க்விஸ் போட்டிகளும் நடத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
“ஃபேஸ்புக் வீடியோக்கள் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், பயன்பாட்டாளர்கள், வீடியோவோடு தொடர்பு கொள்ளும் வகையில், இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என பேஸ்புக் தெரிவித்தது.
“லைவ் போலிங், ஆன்-டிமாண்ட் வீடியோ ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம், ஜாலியான, இன்டெராக்டிவ் வீடியோக்களை உருவாக்க முடியும்“ என்கிறது அந்நிறுவனம்.
சி.என்.என், ஃபாக்ஸ் செய்தி, ஏபிசி செய்தி, யூனிவிஷன் ஆகிய செய்தி நிறுவனங்கள் ஃபேஸ்புக்குடன் இணைந்து, சமூக வலைத்தளத்தில் நேரடி செய்தி தொகுப்புகளை தர உள்ளது.
இதன் மூலம், அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து வரும் செய்திகளும், வாடிக்கையாளர்கள் தயாரிக்கும் செய்தி வீடியோக்களும் ஆகிய இரண்டும் பேஸ்புக்கில் பயன்பாட்டிற்கு வருகின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்