Photo Credit: Disney/Lucasfilm, Fox
‘அவதார்' திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை வெளியிடும் உரிமை தற்போது டிஸ்னி நிறுவனத்திடம் உள்ளது. இந்நிலையில் டிஸ்னி, அவதாரின் அடுத்தடுத்த பாகங்கள் உள்ளிட்ட தனது அடுத்த படங்கள் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்டி ‘அவதார் 2' டிசம்பர் 2021-ல் ரிலீஸ் செய்யப்படும். டிசம்பர் 2023-ல் ‘அவதார் 3' ரிலீஸ் செய்யப்படும். டிசம்பர் 2025-ல் ‘அவதார் 4'-ம் பாகமும், டிசம்பர் 2027-ல் ‘அவதார் 5'-ம் பாகமும் வெளியிடப்படும் என்று டிஸ்னி அறிவித்துள்ளது.
அவதார் மட்டும் அல்லாமல், ‘மார்வெல்' நிறுவன திரைப்படங்கள், பிக்சார் படங்கள், ஸ்டார் வார்ஸ் படங்கள், X-மென் படங்கள், டிஸ்னியின் சொந்த தயாரிப்பில் வெளிவர உள்ள படங்கள் என அனைத்துக்குமான புதிய ரிலீஸ் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது டிஸ்னி நிறுவனம்.
இது குறித்து பேசியுள்ள டிஸ்னி நிறுவனத்தின் திரைப்பட விநியோகப் பிரிவுத் தலைவர், கத்லீட் டாஃப், ‘மிகவும் அதிரடியான கால அட்டவணையை நாங்கள் வகுத்துள்ளோம். பிக்சார், மார்வெல், லுகாஸ்ஃபிலிம், ஃபாக்ஸ், ஃபாக்ஸ் சர்ச்லைடை, ப்ளூ ஸ்கை ஸ்டூடியோஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் திரைப்படத்தை அடுத்தடுத்து கொண்டு வரும் வகையில் பட்டியல் போட்டுள்ளோம். இந்த பட்டியல் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல திரையனுபவம் கிடைக்கும்.
இந்த ஆண்டு, திரைப்படங்களின் வீச்சு நன்றாக இருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் இதை தக்கவைக்க முயல்வோம். மிகவும் படைப்பாற்றலுடன் வரும் கதைகளுக்கும், தைரியமான திரைப்பட உருவாக்கலுக்கும்தான் முழு பெருமையும் போய் சேரும்' என்று கூறியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்