ஆஸ்கர் விருதுகளில் சூப்பர் ஹிரோ படம் பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் மூறை!
Photo Credit: Disney/Marvel Studios
கடந்த செவ்வாய்கிழமை வெளியான ஆஸ்கர் வருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியான நிலையில் சிறந்த திரைப்படதிற்கான பரிந்துரையில் பிளாக் பாந்தர் திரைப்டம் இடம் பிடித்தது. ஓரு சூப்பர் ஹிரோ படம் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல் மூறை. மார்வல் ஸ்டூடியோஸ் பரிந்துரையாகும் முதல் பிரிவும் இதுவே.
மேலும் 2019 ஆஸ்கார் பரிந்துரைகளில் பிளாக் பாந்தர் திரைப்படம் மொத்தமாக 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த ஓரிஜினல் ஸ்கோர், சிறந்த ஓரிஜினல் சாங் ‘ஆல் தி ஸ்டார்ஸ்', சிரந்த சவுண்ட் எடிட்டிங் மற்றும் மிக்சிங், சிறந்த புரடக்ஷன் டிசையின் மற்றும் சிறந்த காஸ்டியும் டிசையின் போன்ற பிரிவுகளில் பிளாக் பாந்தர் படம் பரிந்துரை செய்யப்பட்டது.
சிறந்த விஷூவல் எஃவக்ட்ஸ்கான விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறாத நிலையில் அந்த பரிந்துரை பட்டியலில் அவேஞ்ஜர்ஸின் இன்பினிட்டி வார் திரைப்படம் இடம்பெற்றது. கிங் ஆப் மார்வல் மூவிஸ் என அழைக்கப்பட்ட இத்திரைப்படம் வசூல் ரிதியாகவும் சாதணை படைத்தது.
இத்திரைப்படத்தின் வில்லனாக நடித்த மைக்கில் பி ஜோர்டானின் நடிப்பு மற்றும் ஆப்பிர்காவை மையப்படுத்தி படம் இருப்பதால் அங்கிருக்கும் இசை கருவிகள் போன்றவையை பயன்படுத்தியதால் படத்திற்க்கு பலமாக அமைந்ததாக மக்களிடை கருத்து நிலவுகிறது.
மேலும் இதுவே மக்களிடையே இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெறவும் ஆஸ்கர விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டதற்கும் முக்கிய காரணம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed