ஹாட்ஸ்டாரில் 'பெஸ்ட் ஆப் தி லேட்டஸ்ட்' மலையாள படங்கள் இதோ...!

ஹாட்ஸ்டாரில் 'பெஸ்ட் ஆப் தி லேட்டஸ்ட்' மலையாள படங்கள் இதோ...!
ஹைலைட்ஸ்
  • ஹாட்ஸ்டார், பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ 5 என பல பொழுதுபோக்கு ஆப்கள் உள்ளன
  • நிஜ வாழ்க்கை சூழலை வைத்து படம் எடுக்கும் திரையுலகம் மாலிவுட்
  • ஹாட்ஸ்டாரில் மலையாள படங்களுக்கென தனி பிரிவுள்ளது.
விளம்பரம்

முந்தைய காலங்களில் நாடக மேடைகள் கொடிகட்டி பரந்து வந்தன. அதனுடைய மாற்று களமாக சினிமா தியேட்டர்கள் வர துவங்கின. நாட்கள் செல்ல செல்ல மக்கள் மேடை நாடகங்களில் இருந்து தியேட்டருக்கு படையெடுக்க ஆரம்பித்தன. மனிதனை விட பன்மடங்கு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் இணையதள வளர்ச்சியானது மக்களை தியேட்டர்களில் இருந்து மொபைலுக்கு மாற வைத்துள்ளது.

ஹாட்ஸ்டார், பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ 5, வூத் என பற்பல பொழுதுபோக்கு ஆப்கள் வந்துள்ளன. எம்.ஜி.ஆர் கால படங்களில் இருந்து எஸ்.டி.ஆர் படம் வரையிலான அனைத்து படங்களும் இதில் கொட்டி கிடக்கின்றன.

பட உலகில் தனக்கு என தனி இடம் பெற்றது மலையாள திரையுலகம். ஆடம்பரம் இன்றி நிஜ வாழ்க்கை சூழலை வைத்து படம் எடுக்கும் திரையுலகம் மாலிவுட். ஹாட்ஸ்டாரில் மலையாள படங்களுக்கென தனி பிரிவுள்ளது. அதில் மம்மூட்டி, மோகன்லால், திலிப் என மூத்த நடிகர்கள் துவங்கி துல்கர், நிவின் பாலி, ப்ரித்விராஜ் என இளம் நடிகர்களின் படம் வரை உள்ளன.

அதில் ஹாட்ஸ்டாரில் கிடைக்கும் இளம் நடிகர்களின் பெஸ்ட் படங்கள் எவை என்பதை இதில் காணலாம்

மும்பை போலிஸ் (Mumbai police):

ப்ரித்வி ராஜின் நடிப்பில் ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கிய இந்த படம் ஒரு த்ரில்லர் படமாகும். படத்தின் ஹைலைட்டே அந்த கிளைமாக்ஸ் தான். ப்ரித்வி ராஜுடன் இணைந்து ஜெயசூர்யா, ரஜ்மான் ஆகியோரும் பட்டைய கிளப்பியிருப்பார்கள்.

Mumbai police

நீலகாசம் பச்சகடல் சுவன பூமி (Neelakacham Pachakadhal Chuvana Boomi):

காதலியை தேடி இந்தியா முழுவதும் ‘பைக் ட்ரிப்' செல்லும் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடித்திருப்பார். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்கள், நிலங்கள், மனிதர்களை இந்த படத்தில் காணலாம். துல்கரின் நண்பனாக அவருடன் பைக் ட்ரிப் செல்வார் சன்னி. இன்றைய யூத்களின் கல்ட் படங்களில் இதுவும் ஒன்று.

Neelakacham Pachakadhal Chuvana Boomi

உஷ்தாட் ஓட்டல் (Usthad hotel) :

துல்கரின் மற்றுமொரு பெஸ்ட் பிலிம். 2012 யில் வெளியான இந்த படமானது துலகரின் இரண்டாவது படமாகும். அன்வர் ரஷீத்யின் இயக்கத்தில் துலகர் – நித்யா மேனன் நடித்திருப்பார்கள். மலையாள வாசம் படம் முழுவதும் உணர முடியும். இந்த படத்தின் ரியல் நாயககர்கள் இருவர். ஒருவர் திலகன் மற்றொன்று உணவு. சுலைமானி முதல் மலபார் பிரியாணி வரை படம் முழுவதும் மலையாள பாரம்பரிய வாசம் வீசும்.

Usthad hotel

பிரேமம் (Premam):

ஒரு லைன் கதை தான் – காதல். அதனை வைத்து அல்போன்ஸ் புத்ரன் இப்படி ஒரு கிளாசிக் கல்ட் கொடுப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். மலையாள திரையரங்களில் ஓடியதை விட தமிழகத்தில் தான் இந்த படம் அதிரிபுதிரி ஹிட். நிவின் பாலி பெண்களின் சாக்லெட் பாய் ஆணார். அனைத்து இளைஞர்களின் இதயத்தையும் கொள்ளை கொண்டு போனார் மலர் டீச்சர். ஆட்டோகிராபின் மலையால வெர்சனாக இருந்தாலும் இந்த படத்தில் ஏதோ ஒரு மேஜிக் இருக்க தான் செய்தது. அந்த மேஜிக்கிற்கு பாடல்கள் செம லைப் கொடுத்திருக்கும்.

Premam

டேக் ஆப் (Take off):

இன்றைய திரையுலகில் பல ஹீரோயின்கள் இருக்கலாம். ஆனால் தனது நடிப்பால் மட்டுமே டாப் ஆக்டராக உயர்ந்தவர் பார்வதி. இந்த படத்திற்காக தேசிய விருதில் ஸ்பெஷல் ஜூரி விருது வென்றார் பார்வதி. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பாகித் பாசல், குஞ்சச்கோ போபன் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.

Take off

கலி (Kali):

சாக்லெட் பாய் துக்லர் சல்மான் – மலர் டீச்சராக மனதை கொள்ளை கொண்ட சாய் பல்லவியும் இணைந்த நடித்த இந்த படம்,சமீர் தாகிர் இயக்கத்தில் உருவானது. கோபாகார துலகரை காதல் திருமணம் செய்யும் சாய் பல்லவி அந்த திருமண வாழ்க்கையில் இவர்களது பயணம் என நகரும் இந்த படம்.

Kali

மெமரிஸ் (Memories):

தமிழில் அருள்நிதி நடிப்பில் வந்த ஆறாது சினம் படத்தின் ஒரிஜினல் வெர்சன் தான் இந்த படம். த்ரிசியம் படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஜுத்து ஜோசப்பின் படம் தான் இது. ப்ரித்வி ராஜ் தன் அசுர நடிப்பாற்றலை இதில் காட்டிருப்பார்.

Memories

பெங்களூர் டேய்ஸ் (Bangalore days):

கல்ட் பிலிம் என்ற பட்டியலில் தவறாது இடம் பெறும் படம் இது. அஞ்சலி மேனன் மேக்கிங்கில் நஸ்ரியா, துல்கர், நிவின் பாலி நடித்த இந்த படம் அதிரிபுதிரி ஹிட். மலையாள பட உலகில் எந்த ஈகோவும் இல்லாமல மல்டி ஸ்டார் படங்களில் டாப் ஹீரோக்கள் நடிப்பார்கள். மம்மூட்டி, மோகன்லால் துவங்கி அந்த கலாசாரம் துலகர், நிவின் பாலி வரை பரவியுள்ளது. அதற்கு ஓர் சிறந்த சான்று இந்த படம்.

Bangalore days

தொண்டிமுத்தாலும் த்ரிக்சாக்சியம் (Thondimuthalum driksakshiyum):

தனது நடிப்பால் மட்டுமே உயர்ந்தவர் பாகித் பாசல். திலிஷ் போதான் இயக்கத்தில் பாகித் பாசல் நடித்திருப்பார். மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படம், பாகித் பாசல் வாழ்வில் ஓர் மைல்கல் ஆகும்.

Thondimuthalum driksakshiyum

கம்மட்டிபாதம் (Kammatipadam):

துல்கர் சல்மானின் சாக்லெட் பாய் இமேஜை உடைத்தெரிந்த படம் இது தான். தானும் ஓர் தலைசிறந்த நடிகன் என ஸ்டாம் குத்தினார் துல்கர். ராஜீவ் ரவியின் கிளாசிக் படம் இது. இந்த படத்தில் துல்கரையும் மிஞ்சி நடித்திருப்பார் விநாயகன். பெஸ்ட் ஆப் மலையாள பிலிம் என்றால் அதில் இதுவும் ஒன்று.

Kammatipadam
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Malayalam, Malayalam Movies
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. தமிழில் சக்கை போடு போட்ட Dragon படத்தின் OTT ரிலீஸ் தேதி உறுதியானது
  2. Asus Zenbook A14, Vivobook 16 இந்தியாவில் இறங்கி ஒரு கலக்கு கலக்க போகுது
  3. அம்சத்துடன் Reliance Jio நிறுவனத்தின் புதிய ரூ.100 பிரீ பெய்டு பிளான்
  4. பெண்களை கவரும் HMD Barbie Flip செல்போன் இந்தியாவுக்கு வருவது உறுதி
  5. Nothing Phone 3a, Phone 3a Pro செல்போன்களுக்கு கணிசமான எக்ஸ்சேஜ் ஆபர்
  6. நட்சத்திர பட்டாளம் நடித்த Agent படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
  7. Infinix Note 50X 5G செல்போன் மார்ச் 27ல் இந்தியாவில் அறிமுகமாவது உறுதி
  8. Vivo T4x 5G செல்போன் 6,500mAh பேட்டரியுடன் அட்டகாசமாக அறிமுகமாகிறது
  9. Realme 14 Pro+ 5G செல்போன் அடுத்து 512GB மெமரியுடன் அறிமுகமாகிறது
  10. Xiaomi Holi Sale ஆபரில் சலுகை விலையில் கிடைக்கும் Redmi Note 14 5G, Note 13
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »