திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியான அவெஞ்சர்ஸ்!

அவெஞ்சர்ஸ் திரைப்படம் திரையில் வெளிவருவதற்கு முன்னரே இணையதளங்களில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியான அவெஞ்சர்ஸ்!

Photo Credit: Disney/Marvel Studios

திரையில் வெளிவருவதற்கு முன்னரே இணையதளங்களில் வெளியானது அவெஞ்சர்ஸ்.

ஹைலைட்ஸ்
  • அவெஞ்சர்ஸ் எண்டு கேம் இந்தியாவில் ஏப்.26ல் வெளியானது.
  • 2 கேமராவில் பதிவு செய்யப்பட்ட முழு திரைப்படம் வெளியானது
  • இரண்டும், தியேட்டர் பிரிட்ண்ட்களே
விளம்பரம்

1.2 ஜிபியில், குறைந்த வீடியோ குவாலிட்டி கொண்ட அந்த வீடியோவில் முழு திரைப்படமும் கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவில் உள்ள திரையரங்குகளில் எடுக்கப்பட்டு முதலில் அங்குள்ள லோக்கல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பின் அது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இதேபோல், 2 வது ஒரு வீடியோ வெளியானது, அது 3.7 ஜிபி அளவு கொண்டிருந்தது. அதுவும் ஆனால், திரையரங்குகளில் கேமிராவில் பதிவு செய்யப்பட்ட ஒன்று தான். அதன் குவாலிட்டி முதலில் வெளியானதை விட சற்று தரமாக இருந்தது.

டோரண்ட் பிரிக் என்ற இணைதளமே முதலில் படம் டோரண்டில் வெளியானது குறித்து தகவல் தெரிவித்தது. அதில், ஆங்கில ஆடியோவும் சீன சப்டைட்டிலும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. எனினும் அந்த வீடியோவின் குவாலிட்டி தரமாக இல்லாததால் யாரும் பார்க்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்டது.

எனினும் சிறிது நேரத்தில் அதனை விட சிறந்த குவாலிட்டி கொண்ட வீடியோவும் வெளியானது. அதில், ரஷ்யாவை சேர்ந்த நிறுவனத்தின் வாட்டர் மார்க் மற்றும் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. எனினும், இதிலும் ஆடியோ தெளிவாக இல்லை என டோரண்ட் பிரிக் இணையதளம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 400 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். இந்த படத்தை இரட்டையர்கள் ரூஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15 வெளிவந்தாச்சு! அதிரடியான லுக் மற்றும் கேமரா லீக்! புது போன் வாங்க காத்திருந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  2. பட்ஜெட் விலையில் பக்கா போன்! Poco M7 Plus 5G புதிய மாடல் வந்தாச்சு! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 11,000-க்குள்ள வாங்கலாம்
  3. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா
  4. iPhone 17 ஆர்டர் பண்ணீட்டீங்களா? பெரிய ஷாக் காத்திருக்கு! விநியோகம் தாமதமாகும்னு ஆப்பிள் சொல்லுது
  5. ஐபோன் 14 வாங்க இதுதான் சரியான நேரம்! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 40,000க்கும் குறைவான விலையில்
  6. நத்திங் ஃபேன்ஸ் ரெடியா? புது இயர் 3-ல ‘டாப் பட்டன்’ இருக்காம்! அது எதுக்குன்னு தெரியுமா
  7. விவோ ஃபேன்ஸ் வெய்ட்டிங் ஓவர்! X300 சீரிஸ் போன் லான்ச் தேதி லீக் ஆயிருக்கு
  8. பிக் பில்லியன் டேஸ் வருது! ஐபோன் வாங்க ஆசையா? பிளிப்கார்ட் கொடுக்கும் மெகா ஆபர்
  9. சாம்சங் கேலக்ஸி S26 ப்ரோவின் லீக் ஆன வடிவமைப்பு: புதிய கேமரா மற்றும் கலர் விவரங்கள் இதோ!
  10. ஒப்போ ரசிகர்களே ரெடியா? ஃபைண்ட் X9 சீரிஸ் போன் லான்ச் ஆகுறதுக்கு முன்னாடிய தகவல் வந்தாச்சு!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »