Avengers Endgame box office: 5 நாட்களில் 1.22 பில்லியன் வசூலை எட்டியுள்ளது. இது முந்தைய படத்தின் வசூலான 640.5 மில்லியன் டாலரை விட இரண்டு மடங்காகும்
Photo Credit: Disney/Marvel Studios
Avengers Endgame: அவென்ஜர்ஸ் எண்ட்கேம் : படக்காட்சி
அவென்ஜர்ஸ் எண்ட்கேம் உலகளாவிய அளவில் வெளியான 5 நாட்களில் சுமார் 1.22 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,517 கோடி) வசூலித்துள்ளது. இது 1பில்லியன் டாலர் வசூலை மிகக் குறைவான நாட்களில் கடந்த படமாக இது உள்ளது. இந்த வரிசையில் 17 இடத்தை அவென்ஜர்ஸ் பெறுகிறது. உலகளவில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. 5 நாட்களில் 1.22 பில்லியன் வசூலை எட்டியுள்ளது. இது முந்தைய படத்தின் வசூலான 640.5 மில்லியன் டாலரை விட இரண்டு மடங்காகும். இது முன்னணியிலிருந்த ஐமேக்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஸ்டார் வார்ஸ் : தி ஃபேர்ஸ் அவேகன்ஸ் பெற்ற வசூலான 47.6 மில்லியன் டாலரை விட அதிகம்.
அவென்ஜர்ஸ் எண்ட்கேம் தன்னுடைய அமெரிக்க நாட்டில் 357.1 மில்லியன் டாலர் (ரூ2,493 கோடி) வசூலை எட்டியுள்ளது. சீனாவில் 330. 5 மில்லியன் டாலர் வசூலை எட்டியுள்ளது. இங்கிலாந்தில் 53.8 மில்லியன் டாலரும், தென் கொரியாவில் 47.4 மில்லியன் டாலரும், மெக்ஸிகோவில் 33.1 மில்லியன் டாலரும், ஆஸ்திரேலியாவில் 30.8 மில்லியன் டாலரும்னியில், ஜெர்மனியில் 26.9 மில்லியன் டாலரும், இந்தியாவில் 26.7 மில்லியன் டாலரும், பிரேசில் 26.0 மில்லியன் டாலரும், பிரான்ஸில் 24.2 மில்லியன் டாலரும் இத்தாலிய்ல் 19.0 மில்லியன் டாலரும் ஸ்பெயினில் 13.3 மில்லியன் டாலரும், ஜப்பானில் 13.0 மில்லியன் டாலரும் ஹாங்க் காங்கில் 12.5 டாலரும் தாய்வானில் 12.3 மில்லியன் டாலரும் வசூலை எட்டியுள்ளது. 44 நாடுகளில் மிகப்பெரிய தொடக்கத்துடன் களமிறங்கியது.
ரஷ்யாவில் மட்டுமே சர்வதேச சந்தையில் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் வெளியாகவில்லை. திங்களன்றே வெளியாகும் எனத் தெரிகிறது.
வசூர்குறித்த அதிகாரப்பூர்வ தகவலை டிஸ்னி இன்னும் வழங்கவில்லை. எண்ட் கேம் முன்னோட்ட காட்சி நாளில் 60 மில்லியன் வசூலும் தொடக்க நாளில் 156.7 மில்லியன் டாலர் வசூலும். சனிக்கிழமை 109 மில்லியன் டாலரும், ஞாயிற்றுக் கிழமை 84.3 மில்லியன் டாலர் வசூலை அமெரிக்காவில் ஈட்டியுள்ளது.
மிகப்பெரிய அளவிலான ஒபனிங்க் காரணமாக மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் டிக்கெட் சார்ஜ் மூலமாக 19.9 பில்லியன் டாலரை (1,38,982 கோடி ரூபாய்) வசூலித்துள்ளது. ஐயர் மேன் 3 (1,214 பில்லியன் டாலர்) பிளாக் பாந்தர் (1.346 பில்லியன் டாலரும்) தி அவென்ஞ்சர்ஸ் (1,518 பில்லியன் டாலரும் )இன்ஃபிடினி வார் (2.048 பில்லியன் டாலரும்) வசூலை எட்டிய வரிசையில் தற்போது அவென்ஜர்ஸ் எண்ட்கேமும் உருவாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
YouTube's New 'Ask' Button Uses Gemini to Get Instant Video Answers
WhatsApp for Android May Let Users Reserve Same Usernames Used on Facebook and Instagram