டிசம்பர் 31, 2019 முதல் வாட்ஸ்அப் (WhatsApp) அனைத்து விண்டோஸ் போன்களுக்கான ஆதரவையும் திரும்பப் பெறுகிறது.
உலகளவில் மில்லியன் கணக்கான பழைய மொபைல் சாதனங்களில் வேலை செய்வதை WhatsApp நிறுத்திவிடும்
உலகளவில் மில்லியன் கணக்கான பழைய மொபைல் சாதனங்களில் வேலை செய்வதை WhatsApp நிறுத்திவிடும். விண்டோஸ் போன்களில் உள்ள பயனர்கள் டிசம்பர் 31-க்குப் பிறகு எப்போதும் பயன்படுத்த முடியாது என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1, 2020 முதல், எந்த பதிப்பு 2.3.7-ல் இயங்கும் Android சாதனமும், அதனுடன் iOS 8-ல் இயங்கும் எந்த ஐபோனும் இனி ஆதரிக்கப்படாது.
இந்த விவரங்கள் அதன் blog-ல் வாட்ஸ்அப்பில் வெளியிடப்பட்டன, அதே போல் அதன் FAQ page-லும் வெளியிடப்பட்டன. Facebook-கிற்கு சொந்தமான நிறுவனம், "இந்த operating systems-ன் பயனர்கள் ஏற்கனவே புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவோ முடியவில்லை.
மைக்ரோசாப்ட் (Microsoft) தனது விண்டோஸ் 10 மொபைல் ஓஎஸ் (Windows 10 Mobile OS) ஆதரவை முடித்த அதே மாதத்தில், டிசம்பர் 31, 2019 முதல் வாட்ஸ்அப் (WhatsApp) அனைத்து விண்டோஸ் போன்களுக்கான ஆதரவையும் திரும்பப் பெறுகிறது.
பேஸ்புக் (Facebook) 2014-ல் 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ்அப்பை வாங்கியது மற்றும் மெசேஜிங் தளத்தை அதன் பிற சேவைகளான Messenger மற்றும் Instagram-ல் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள பயனர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்புவதில் அல்லது பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டனர். அறிக்கைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவில் செயலிழப்புகளைக் காட்டின.
இந்த மாத தொடக்கத்தில், ஐபோனுக்கான அம்சத்தை அறிமுகப்படுத்திய சில வாரங்களுக்குப் பிறகு, வாட்ஸ்அப், அழைப்பு காத்திருப்பு அம்சத்தை அதன் ஆண்ட்ராய்டு செயலிக்கு கொண்டு வந்தது. அப்டேட்டுக்கு முன்பு, ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றொரு வாட்ஸ்அப் அழைப்பின் மத்தியில் ஒரு வாட்ஸ்அப் அழைப்பைப் பெற்றபோது, உள்வரும் அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டது, மேலும் இருக்கும் உரையாடல் முடிந்ததும் அவர்கள் தவறவிட்ட அழைப்பு அறிவிப்பைக் காண்பார்கள். ஆனால் அப்டேட்டைத் தொடர்ந்து, பயனர்கள் மற்றொரு நபருடன் பேசும்போது உள்வரும் அழைப்பைத் தேர்வுசெய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung's One UI 8.5 Beta Update Rolls Out to Galaxy S25 Series in Multiple Regions
Elon Musk Says Grok 4.20 AI Model Could Be Released in a Month