வாட்ஸ்அப்பில் இனி தனித்தனியாக நமக்குப் பிடித்தவர்களின் போட்டோக்களை கூட வால்பேப்பராக வைத்துக் கொள்ளலாம்.
Photo Credit: WABetaInfo
ஒருவர் தனது ஷேர் சாட் வீடியோ லிங்கை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால், ஷேர் சாட்டில் இல்லாத பயனர்களும், அந்த வீடியோவைப் பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் இன்-பிக்சரில் ஷேர் சாட் வீடியோக்களைப் பார்க்கும் வசதி கொண்டு வரப்படுகிறது. இதன் சோதனை முயற்சி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் தென்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஒவ்வொரு முறையும் புதிய அம்சங்களை கொண்டு வருவதற்கு முன்பாக, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்படும். இதனால் பீட்டா வெர்ஷனை பின்தொடர்ந்தால், வாட்ஸ்அப் அப்டேட்டை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் தற்போது ஷேர் சாட் தென்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா v2.20.197.7 வெர்ஷனில் ஆண்ட்ராய்டுக்கான சோதனை நடைபெற்று வருகிறது. இதே போல், வாட்ஸ் பீட்டா v2.20.81.3 வெர்ஷனில் ஐஓஎஸ் தளத்திற்கான சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுவாக வாட்ஸ்அப்பில் யூடியூப் லிங்கை க்ளிக் செய்தால், தனியாக பிரவுசருக்கு செல்லாமல், வாட்ஸ்அப் திரையிலேயே யூடியூப் வீடியோவைப் பார்க்க முடியும். அதே போல், இனி ஷேர் சாட் வீடியோவையும் வாட்ஸ்அப் திரையிலேயே பார்க்கலாம்.
இதுகுறித்த வாட்ஸ்ப் பீட்டா வெர்ஷன் தகவல்களை அள்ளித்தரும் WABetaInfo இணையதளம் விரிவாக கட்டுரை எழுதியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப்பில் அனைவராலும் ஷேர் சாட்டை உடனடியாக பார்க்க முடியாது.இந்த வசதி இருந்தாலும் 24 மணி நேரம் மட்டுமே பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியபடி இந்த அம்சங்கள் v2.20.197.7 பதிப்பில் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டா சோதனை செய்து வருகிறது. ஒருவர் தனது ஷேர் சாட் வீடியோ லிங்கை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால், ஷேர் சாட்டில் இல்லாத பயனர்களும், அந்த வீடியோவைப் பார்க்கலாம்.
![]()
வாட்ஸ்அப்பின் புதிய மல்டி வால்பேப்பர் அம்சம்
Photo Credit: WABetaInfo
இதே போல் வாட்ஸ்அப்பில் புதிதாக மல்டி வால்பேப்பர் அம்சம் கொண்டு வருவதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு சாட்டுக்கும் ஒவ்வொரு வால்பேப்பரை வைத்துக் கொள்ளலாம். இந்த சோதனை வாட்ஸ்அப் பீட்டா v2.20.90.21 வெர்ஷனில் சோதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரையில் ஒரே ஒரு வால்பேப்பர் தான் வாட்ஸ்அப் முழுமைக்கும் வைக்கும்படி இருந்து வருகிறது. இனி தனித்தனியாக நமக்குப் பிடித்தவர்களின் போட்டோக்களை கூட வால்பேப்பராக வைத்துக் கொள்ளலாம்.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Assassin's Creed Mirage, Wo Long: Fallen Dynasty Reportedly Coming to PS Plus Game Catalogue in December
Samsung Galaxy S26 to Miss Camera Upgrades as Company Focuses on Price Control: Report