WhatsApp `Together at home' என்னும் புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மக்கள் அனுபவிக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய ஸ்டிக்கர்களை, உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து, வாட்ஸ்அப் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
25 WhatsApp Tricks to Help Master the Messaging App
வாட்ஸ்அப் ஒரு ‘ஏர் ஹை ஃபைவ்' மற்றும் ‘குரூப் வீடியோ காலிங்' ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஸ்டிக்கர்கள் மூலம் சமூக தூரத்தை ஊக்குவிக்கிறது. இந்த ஸ்டிக்கர் பேக்கில், ஓகே, கை கழுவுதல், வீட்டில் இருத்தல், வீட்டில் இருந்தே பணி புரிதல் போன்ற பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன. கோவிட்-19 நெருக்கடியின் போது மருத்துவ ஹீரோக்களையும் தனிப்பட்ட ஹீரோக்களையும் கொண்டாடும் ஸ்டிக்கர்கள் உள்ளன.
“Together at Home” ஸ்டிக்கர் பேக் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் கிடைக்கிறது. பிறகு, சேட் பாக்ஸில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷன் சென்று இந்த பேக்கை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வாட்ஸ்அப்பின் புதிய ஸ்டிக்கர்கள் ஆங்கிலம், அரபு, பிரஞ்சு, ஜெர்மன், இந்தோனேசிய, இத்தாலியன், போர்த்துகீசியம், ரஷ்ய, ஸ்பானிஷ் மற்றும் துருக்கிய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த புதிய ஸ்டிக்கர் பேக் மூலம், தொற்றுநோய்களின் போது இணைந்திருக்க கூடுதல் வழிகளை வாட்ஸ்அப் வழங்குகிறது.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்