Photo Credit: Unsplash
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது WhatsApp Spam blocker வசதி பற்றி தான்.
Meta நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக பயனர் பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பேம் பிளாக்கர் என்ற வசதியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை தானாகவே ப்ளாக் செய்யப்படுகிறது. இது சமீபத்தில் ஆண்ட்ராய்டில் பீட்டா சோதனையாளர்களுக்கு வெளியிடப்பட்டது. இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. அம்சம் இன்னும் சோதனையில் இருப்பதால் இன்னும் கொஞ்ச நாளில் எல்லோருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர தற்போது வாட்ஸ்அப்பின் மேம்பட்ட தனியுரிமை பாதுகாப்பு செட்டிங்கில் IP அட்ரஸை பாதுகாக்கவும், லிங்க் ப்ரீவியூக்களை டிஸ்ஏபிள் செய்யவும் வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனுடன் இன்னொரு வசதியும் அறிமுகமாகி இருக்கிறது. இப்போது வாட்ஸ்அப்பில் நாம் வைக்கும் ஸ்டேட்டஸை பிறர் பார்க்க முடியும். பிறர் வைக்கும் ஸ்டேட்டஸையும் நாம் பார்க்க மட்டுமே முடியும் அல்லது அதற்கு பதில் அனுப்பலாம். ஆனால், அந்த ஸ்டேட்டஸை லைக் செய்ய முடியாது. ஆனால் இனி அதுவும் செய்ய முடியும்.
இந்த புதிய வசதியின்படி, ஸ்டேட்டஸின் கீழ் ரிப்ளை ஆப்ஷனுக்குப் பக்கத்தில் லைக் பட்டன் ஒன்றும் கொடுக்கப்படவிருக்கிறது. அந்த லைக் பட்டனை கிளிக் செய்வதன் மூலம், குறிப்பிட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நாம் லைக் செய்ய முடியும். மேலும், ஒரு குறிப்பிட்ட ஸ்டேட்டஸை யார் யார் லைக் செய்திருக்கிறார்கள் என்பது அந்த ஸ்டேட்டஸை பகிர்ந்தவருக்கு மட்டுமே தெரியும்.
இது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் இருக்கும் வசதியை ஒத்துள்ளது. வரவிருக்கும் பதிப்பில் இந்த அம்சம் iOS மற்றும் Android இல் உள்ள பயனர்களுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வந்துள்ள Spam Block வசதி மூலம் வாட்ஸ்அப் கணக்கைப் பாதுகாக்கவும், மொபைலின் செயல்திறனை மேம்படுத்தவும், அறிமுகமில்லாத நம்பர்களில் இருந்து இருந்து வரும் மெசேஜ்களை வாட்ஸ்அப் தானாகவே தடுக்கவும் முடிகிறது. ஸ்பாம் மேசேஜ்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது என்று அம்சம் தானாக பிளாக் செய்துவிடும்.ஸ்மார்ட்போனின் மெமரி மற்றும் பிராசஸரை பாதிக்கும் ஸ்பேம் மற்றும் தேவையற்ற மெசேஜ்களைக் குறைப்பதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் மேம்பட்ட அனுபவத்தை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக மெமரியை நிறைக்கும் அதிக அளவிலான மெசேஜ்கள் ஸ்பேம் எனப்படுகிறது. புதிய வசதி மூலம் ஸ்பேம் கணக்குகளைத் தடுப்பது, வாட்ஸ்அப் செயலின் பிராசஸிங் டேட்டா அளவைக் குறைக்க உதவும். இந்த அம்சம் பயனரின் பிரைவசியை உறுதிசெய்யும் அதே வேளையில் தீங்கிழைக்கும் ஆப்களையும் தடுக்கவும் உதவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்