வாட்ஸ் ஆப் நிறுவனம், ‘ப்ரெடிக்டட் அப்லோட்’ எனப்படும் வசதியை ஆண்டுராய்டு மற்றும் ஐபோன்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. WABetaInfo இணையதளத்தின் வெளியீடுபடி, வாட்ஸ் ஆப் ஆண்டுராய்டு 2.18.156 நிலையிலும், வாட்ஸ் ஆப் ஐபோன் 2.18.61 நிலையிலும் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தது. எனினும், இந்த வசதிகள் வெளியிட்டது குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம், பதில் கிடைத்தவுடன் மேலும் பல விவரங்கள் உடன் வெளியிடப்படும்.
Photo Credit: WABetaInfo
ப்ரெடிக்டட் அப்லோட் என்றால் என்ன?
இந்த வசதி மூலம், புகைப்படத்தை அனுப்ப எண்ணும் போதே, வாட்ஸ் ஆப் சர்வரில் பதிவேற்றப்படுகிறது. இதனால் அனுப்ப ‘செண்ட்’ பட்டனை அழுத்தும் போது, சாதரண நேரத்தை விட விரைவாகவும், முன்னரேவும் அனுப்பப்படுகிறது. இந்த வசதி ஒரு புகைப்படம் அல்லது அதற்கு மேற்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றுவதற்கு உபயோகிக்கலாம்
பயன்பாட்டாளர்கள், ‘டன்’ அல்லது ‘ஓக்கே’ என அழுத்தும் போது, புகைப்படம் எடிட் ஆப்ஷன் தோன்றும். அதனைத் தொடர்ந்து செண்ட் அழுத்துகையில், க்ரே நிற டிக் தோன்றும். அப்படி வரும் போது, புகைப்படங்கள் வாட்ஸ் ஆப் சர்வரில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வசதி உள்ளதா என அறிந்து கொள்ள, கடிகார சின்னம் 0.0001 நொடிகளில் மாறுகிறதா என பாருங்கள். கடிகார சின்னம் தொடர்ந்து காணப்பட்டால்,இந்த வசதி பதிவாகவில்லை என அறிந்து கொள்ளுங்கள்.
இந்த வசதியை வாடிக்கையாளர்கள் வரவேற்பார்களா என்பது கேள்விக்குறியே. அனுப்ப வேண்டாம் என நினைக்கும் புகைப்படங்கள் கூட வாட்ஸ் ஆப் சர்வரில் பதிவேற்றம் செய்யப்படும் போது, அதிக இணைய உபயோகம் ஏற்படும். எனவே இந்த வசதி வரவேற்கதக்கதா இல்லை எதிர்க்க வேண்டியவையா என்ற கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்