WhatsApp Delete Messages அம்சம் அனைத்து தனிப்பட்ட chats-ல் இருந்தும் நீக்கப்பட்டது. இப்போது குழு group chats-ல் மட்டுமே இது பிரதிபலிக்கிறது.
Photo Credit: WABetaInfo
WhatsApp-ன் Delete Messages அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது
வாட்ஸ்அப் (WhatsApp) ஒரு புதிய ‘Delete Messages' அம்சத்தில் இயங்கிவருவதாக கண்டறியப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு chats-களை தானாகவே அழிக்கும். இந்த புதிய அம்சம் முதன்முதலில் ஆண்ட்ராய்டில் வளர்ச்சியில் காணப்பட்டது. இப்போது இது iOS-ல் காணப்படுகிறது. சுவாரஸ்யமாக, வாட்ஸ்அப் “Delete Messages” அம்சத்தின் போக்கை மாற்றியதாகத் தெரிகிறது. இப்போது அதை groups-க்கான “cleaning tool'-ஆக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஸ்டோரேஜை நிர்வகிக்க உதவுவதற்கும், பழைய chats-களை தானாகவே அகற்றுவதற்கும், நிர்வாகிகள் (admins) group chats-களை சிறிது நேரம் கழித்து நீக்கவும் இந்த அம்சம் உதவுகிறது.
சமீபத்திய iOS பீட்டா பதிப்பு 2.20.10.23/24-ல் group chats-களில் இந்த புதிய ‘Delete Messages' அம்சத்தை WABetaInfo கண்டறிந்துள்ளது. இந்த அம்சம் தனிப்பட்ட chats-ல் இருந்து அகற்றப்பட்டதாக டிப்ஸ்டர் கூறுகிறது. இப்போது group chats-களில் மட்டுமே இது பிரதிபலிக்கிறது. மேலும் விசாரித்தபோது, group chats-க்கான cleaning tool-ஆக Delete Messages அம்சம் செயல்படும் என்பதை WABetaInfo கண்டுபிடித்தது. மேலும், செய்திகளை எப்போது நீக்க வேண்டும் என்பதற்கான கால அளவைக் கண்டறியவும், அதை இயக்க (enable) அல்லது முடக்க (disable) நிர்வாகிகளால் (admins) மட்டுமே முடியும். இது பழைய செய்திகளை தானாக நீக்க உதவும். மேலும், போன் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும். சோதனைக்காக இந்த அம்சம் எப்போது இயக்கப்படும் (enable) என்பது குறித்து இன்னும் எந்த வார்த்தையும் இல்லை. டார்க் பயன்முறை (Dark Mode) வெளியீட்டு தேதியிலும் எந்த வார்த்தையும் இல்லை. இந்த அம்சம் நீண்ட காலமாக வளர்ச்சியில் உள்ளது.
Delete Messages அம்சத்தை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பதை இப்போது நாங்கள் அறிவோம். இது எக்கச்சக்க chats-ல் சிக்கித் தவிக்கும் குழுக்களுக்கு வரவேற்கத்தக்க கூடுதலாகும். இது தெரியாமலே போனின் ஸ்டோரேஜை நிரப்புகிறது. குறிப்பிட்டுள்ளபடி, செய்திகளை நீக்குவதற்கு முன்பு, எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நிர்வாகிகள் (admins) தேர்வுசெய்ய முடியும். மேலும், அவர்கள் ஒரு மணிநேரம் முதல் ஒரு வருடம் வரையிலான ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்கலாம்.
WhatsApp Spotted Working on Self-Destructing 'Delete Message' Feature in Latest Android Beta
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately