WhatsApp மெசஞ்சர், குரூப் காலிங்கில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம், 4 பேரில் இருந்து 8 பேர் வரை குரூப் காலிங்கில் பேசலாம். இந்த மாற்றம் முதன்முதலில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனின் பீட்டா பதிப்பில் காணப்பட்டது. இந்த மாற்றம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் உள்ள பயனர்களுக்கு அடுத்த வாரம் தொடங்கும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டிலிருந்து சமூக தொலைதூர வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். எனவே, கடந்த பல வாரங்களாக பெரிய வளர்ச்சியைக் கண்ட Zoom செயலிக்கு போட்டியாக, Facebook-ன் இந்த அறிவிப்பு காணப்படுகிறது.
We're expanding @WhatsApp group video and voice calls to allow up to 8 people. pic.twitter.com/6efqB3rFyv
— Facebook (@Facebook) April 24, 2020
தினசரி 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சரை காலிங்கிற்கு பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில், கோவிட் -19 தொற்று தொடங்கியதிலிருந்து காலிங் இருமடங்காக அதிகரித்துள்ளது என்று மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கில் எழுதினார். அத்துடன், வாட்ஸ்அப் குரூப் காலிங்கிற்கு வரவிருக்கும் மாற்றத்தையும் அவர் அறிவித்தார்.
I'm very excited for this. We'll be rolling out to users on Android and iPhone next week. https://t.co/jNZCBs6EZE
— Will Cathcart (@wcathcart) April 24, 2020
மேலும், மற்ற பேஸ்புக் தயாரிப்புகளின் பல புதிய அம்சங்களையும், மெசஞ்சர் ரூம்ஸ் வெளியீட்டையும், தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார். பேஸ்புக் மெசஞ்சர் தற்போது virtual room-ஐ பெறுகிறது. இது chat app-ன் பயனர்கள் ஒரே நேரத்தில் 50 பேருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்