The chatbot service can be accessed by Delhiites simply by saving the number +91 88000 07722 in your phone contacts and then sending ‘Hi’ on WhatsApp.
சமீப காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பல்வேறு சாட்போட்களை வாட்ஸ்அப் சேர்த்தது
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பற்றிய உடனடி தகவல்களைப் பெறும் வகையில் டெல்லி அரசு, வாட்ஸ்அப்பில் தங்கள் உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. COVID-19 வைரஸ் தொடர்பான முக்கிய அறிகுறிகள் மற்றும் விவரங்களைப் பெற பயன்படுத்தலாம். இந்த உதவி எண்கள், ஒரு சாட்போட் சேவையாக கிடைக்கிறது.
உங்கள் போனில் +91 88000 07722 என்ற எண்ணைச் சேமிக்க வேண்டும்.
பிறகு, WhatsApp-ல் ‘ஹாய்' என்ற செய்தியை அனுப்ப வேண்டும்.
இதன் மூலம், டெல்லி மக்கள் சாட்போட் சேவையை அணுகலாம்.
இந்த உதவி எண்கள் ஆங்கிலத்தில் விவரங்களை வழங்குகிறது.
Novel Coronavirus (SARS-Cov-2) நோய்க்கான அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை வசதிகள் குறித்த விவரங்களைப் பெற சாட்போட் சேவையை அணுகலாம். இந்த போட் டெல்லியில் இருக்கும் இரவு தங்குமிடங்களைப் பற்றிய தகவல்களையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எவ்வாறு நன்கொடை அளிப்பது என்ற அணுகலை வழங்குகிறது. டெல்லி அரசு வாட்ஸ்அப்பில் தனது கொரோனா வைரஸ் ஹெல்ப்லைன் மூலம் ஆப்ஷன்களின் பட்டியலை வழங்கியுள்ளது.
![]()
"ஊரடங்கு காலத்தில் மக்களை பாதுகாப்பாக இருக்க, அவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்துகிறோம். மேலும், அவர்கள் சரிபார்க்கப்பட்ட தகவல்களின் சேனல்களை மட்டுமே நம்பியுள்ளனர் " என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். க்ளவுட் தொடர்பு தளமான Infobip-ஐ பயன்படுத்தி சாட்போட் உருவாக்கப்பட்டது. இது WhatsApp Business ஏபிஐ-ல் உருவாக்கப்பட்டது.
நாட்டின் பல மாநிலங்கள், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை வழங்க சாட்போட் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
மகாராஷ்டிரா - (+91 20 2612 739),
குஜராத் - (+91 74330 00104) மற்றும்
கேரளா - (+91 90722 20183) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் அணுகலாம்.
வாட்ஸ்அப் சமீபத்தில் Coronavirus Information Hub-ஐ அறிமுகப்படுத்தியது. இதில் வைரஸ் பற்றிய தவறான தகவல்களைத் தடுக்க உதவும் வகையில் 1 மில்லியன் நன்கொடை அறிவித்தது. இந்திய அரசு தனது கொரோனா வைரஸ் உதவி எண்ணை Telegram channel மற்றும் Facebook bot மூலம் கொண்டு வந்தது.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation