WhatsApp நிறுவனம் மிஸ்ட் கால் மெசேஜ், இமேஜ் அனிமேஷன் மற்றும் Meta AI-யால் இயங்கும் ஸ்டிக்கர்கள் போன்ற புதிய அம்சங்களை அறிவித்துள்ளது.
Photo Credit: WhatsApp
WhatsApp புதிய அம்சங்கள்: மிஸ்ட் கால் வொய்ஸ் மெசேஜ், இமேஜ் அனிமேஷன், Meta AI ஸ்டிக்கர்கள், அவதார் மேம்பாடுகள்
இப்போ சோஷியல் மீடியாவுல அதிகமா நாம யூஸ் பண்ற ஒரு ஆப் எதுன்னு கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு WhatsApp-னு சொல்லலாம்! Chatting, Calling-ன்னு எல்லாத்துக்கும் இதுதான் நம்ம முதல் சாய்ஸ். இப்போ இந்த WhatsApp, நம்மளுடைய பயன்பாட்டு அனுபவத்தை (User Experience) இன்னும் சூப்பரா மாத்த, அதிரடியான சில புதிய அம்சங்களை அறிவிச்சிருக்காங்க. இந்த அம்சங்கள் என்னென்னன்னு பார்ப்போம். இதுல முதல் அம்சம் தான் ரொம்பவே பயனுள்ளது.
இதுநாள் வரைக்கும், நம்ம யாரையாவது கூப்பிடும்போது அவங்க எடுக்கலைன்னா, அது 'Missed Call'-னு மட்டும்தான் வரும். ஆனா, இனிமேல் அப்படியில்ல! நீங்க ஒருத்தருக்கு வாய்ஸ் கால் பண்ணும்போது, அவங்க எடுக்கலைன்னா, அந்த அழைப்பு கனெக்ட் ஆகி கட் ஆகுறதுக்குள்ள, நீங்க ஒரு சிறிய வாய்ஸ் மெசேஜை (Voicemail மாதிரி) ரெக்கார்ட் பண்ணி, அவங்களுக்குத் தனியா அனுப்பலாம். இது எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு பாருங்க! "நீங்க எடுக்கலை, நான் அப்புறம் கூப்பிடவா?"-ன்னு டைப் பண்றதுக்கு பதிலா, சின்ன வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம். இதனால் அவங்க, எதுக்காக கூப்பிட்டீங்கன்னு தெரிஞ்சு, சீக்கிரமே உங்களைத் திரும்பக் கூப்பிடுவாங்க.
இப்போ WhatsApp-ல கேமராவுல ஒரு போட்டோ எடுக்கும்போது, அதுல சிறிய அனிமேஷன் எஃபெக்ட்களை சேர்க்க முடியும்! நீங்க எடுத்த போட்டோவை இன்னும் லைவ்வாகவும், சுவாரஸ்யமாவும் மாத்துறதுக்கு இந்த அம்சம் உதவியா இருக்கும். ஒரு போட்டோவை சும்மா அனுப்பாம, அதை ஒரு சின்ன வீடியோ மாதிரி மாத்தி அனுப்பலாம்.
இதுதான் WhatsApp-ன் இன்னொரு பெரிய அப்டேட்! இப்போ, நீங்க Meta-ன் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்களுக்குப் பிடிச்ச மாதிரியான ஸ்டிக்கர்களை சுலபமா உருவாக்கலாம்! நீங்க விரும்பும் வார்த்தைகளைக் கொடுத்தால், அதுக்கு ஏத்த மாதிரியான ஸ்டிக்கரை AI உருவாக்கி கொடுக்கும்! அதுமட்டுமில்லாம, உங்களுடைய Avatar customization அம்சங்களும் இன்னும் மேம்படுத்தப்பட்டிருக்கு.
இந்த அப்டேட்ல, ரெண்டு புதிய ஃபான்ட்களும் (Fonts), புதிய எமோஜி ஸ்டிக்கர் பேக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு! இனி நீங்க WhatsApp-ல சாட் பண்ணும்போது, உங்களுடைய மெசேஜ்களை இன்னும் கலர்ஃபுல்லாகவும், ஃபன்னாகவும் அனுப்பலாம். இந்த எல்லா அம்சங்களும் இப்போ படிப்படியாக ஆண்ட்ராய்டு மற்றும் iOS யூஸர்களுக்கு ரோல் அவுட் ஆகிட்டு இருக்கு. உங்க போனுக்கு இந்த அப்டேட் வந்துருச்சான்னு செக் பண்ணுங்க! இந்த புது அம்சங்கள்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi K100 ‘Snow Rock White’ Colourway Officially Teased Ahead of October 27 Launch
Apple Reportedly Rolls Out Anti-Theft System to Scan Returned iPhone Models