வரும் வாரங்களில் ஐபோனை போன்று ஆண்ட்ராய்டு போன்களிலும் ஸ்டிக்கர்களை கொண்டு வரப்போவதாக, இன்று அறிவித்துள்ளது. ஐபோன் வெர்ஷன் 2.18.100ல் இந்த அம்சத்தை காணமுடியும். ஆனால், வி2.18.327ல் அந்த வசதி இல்லை.
மேலும் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்கலாம் என்பது குறித்தும் விளக்கியுள்ளது. நீங்கள் பொறுமையற்றவராக இருந்தால், ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.18.329 வாட்ஸ் அப்-ஐ முயற்சி செய்து பாருங்கள். எங்களால் வி2.18.330-ல் இந்த வசதியை காண முடிந்தது.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த வாட்ஸ் அப் ஸ்டிக்கரின் அறிமுகம் சில பல வதந்திகளுக்கு பிறகு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டிக்கர்களை தாங்களே கொடுக்காமல் பயனாளர்களுக்கு தேவையான ஸ்டிக்கர்களை அவர்களே இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளும்படி வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது.
12 ஸ்டிக்கர் பேக்குகளை வாட்ஸ் அப் கொடுக்கிறது. அதற்கு மேலும் ஸ்டிக்கர்கள் வேண்டுமென்று விரும்புவர்கள் கூகுள் பிளேயிலிருந்து ஸ்டிக்கர் பேக்குகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனில் ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்ததும், வாட்ஸ் அப் வெப்பிலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாட்ஸ் அப்பில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தகவல்களை பறிமாறிக் கொள்வதை அனைவரும் விரும்பக் கூடிய ஒன்றாக மாற்ற, இமோஜி, கேமிரா ஃபீச்சர்ஸ்லிருந்து ஸ்டேட்டஸ் மற்றும் அனிமேட்டட் ஜிஃப் போன்ற புதிய வசதிகளை கொடுக்க வாட்ஸ் அப் முயற்சித்து வருகிறது.
இன்று பயனாளர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதில் மிகவும் உற்சாகமாக உள்ளோம் என்று தங்களது வலைப்பதிவில் வாட்ஸ் அப் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்டிக்கர் ஸ்டோருக்கு சென்று உங்களுடைய சாட்டிற்கு தேவையான ஸ்டிக்கர் எது என்பதை தேர்வு செய்ய ஸ்டிக்கர் ஸ்டோருக்கு செல்லலாம். இதற்கு முன் பயன்படுத்திய ஸ்டிக்கர்களை பற்றி தெரிந்து கொள்ள ஹிஸ்டரி டேப் உள்ளது. உங்களுக்கு மிகவும் விருப்பமான ஸ்டிக்கர்களை ஸ்டார் குறியீடு கொடுத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் டவுன்லோட் செய்த ஸ்டிக்கர் பேக் தேவையில்லை என்றால் மை ஸ்டிக்கர் டாப்பிலிருந்து நீக்கி விடலாம். பயனாளர்கள் வாட்ஸ் அப்பில் தங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் அப்களை உருவாக்கி கொள்ளலாம். அதை எவ்வாறு செய்ய வேண்டுமென்பது குறித்த விளக்க குறிப்பை வாட்ஸ் நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்