புதிய வழிகளில் வருமானம் ஈட்டுவதற்கும் உதவும் வகையில், WhatsApp பல புதிய அம்சங்களை அறிவிச்சிருக்கு.
Photo Credit: WhatsApp
அரட்டைகள் இன்னும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைக் கொண்டிருக்கும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் WhatsApp, தனிப்பட்ட உரையாடல்களுக்கு மட்டுமில்லாம, வணிக நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய தளமாக மாறி வருகிறது. இப்போ, வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் இன்னும் சிறப்பாக இணைவதற்கும், புதிய வழிகளில் வருமானம் ஈட்டுவதற்கும் உதவும் வகையில், WhatsApp பல புதிய அம்சங்களை அறிவிச்சிருக்கு. இதில் ஸ்டேட்டஸில் விளம்பரங்கள், சேனல் சந்தாக்கள் (Channel Subscriptions) மற்றும் 'Promotion Updates' டேப் போன்ற அம்சங்கள் முக்கியமானவை. வாங்க, இந்த புதிய மாற்றங்கள் பத்தி டீட்டெய்லா பார்ப்போம்.
WhatsApp வணிகங்களுக்கு உதவும் வகையில், 'சேனல் சந்தாக்கள்' (Channel Subscriptions) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சம் மூலம், பயனர்கள் தங்கள் விருப்பமான சேனல்களை மாதாந்திர கட்டணம் செலுத்தி ஆதரிக்க முடியும். பதிலுக்கு, சந்தாதாரர்கள் சிறப்பு மற்றும் பிரத்தியேகமான தகவல்கள், அப்டேட்களைப் பெறுவார்கள். இது உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கும், வணிகங்களுக்கும் ஒரு புதிய வருவாய் வழியைத் திறக்கும். மேலும், தங்கள் சேனல்களை பரவலாக்க விரும்பும் நிர்வாகிகளுக்காக 'Promoted Channels' என்ற அம்சமும் வர உள்ளது.
ஒரு முக்கியமான மாற்றம் என்னவென்றால், இனி WhatsApp Status-ல் விளம்பரங்கள் வரும்! இந்த விளம்பரங்கள் 'Updates' (அப்டேட்ஸ்) டேப்பின் கீழ் மட்டுமே தோன்றும். இதன் மூலம், பயனர்கள் புதிய வணிகங்களை கண்டறியவும், அவர்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றி உரையாடல்களைத் தொடங்கவும் முடியும். WhatsApp தெளிவாக ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தியிருக்கு: இந்த விளம்பரங்கள் 'Updates' டேப்பில் மட்டுமே வரும், தனிப்பட்ட உரையாடல்களில் (personal chats) எந்த வகையிலும் விளம்பரங்கள் வராது. மேலும், WhatsApp பயனர்களின் தொலைபேசி எண்களை விளம்பரதாரர்களுடன் பகிராது. நாடு, மொழி மற்றும் நீங்கள் பின்தொடரும் சேனல்கள் போன்ற சில தகவல்களை மட்டுமே விளம்பரங்களைத் தனிப்பயனாக்கப் பயன்படுத்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பயனர்களின் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கிறது.
'Updates' டேப் (முன்பு 'Status' டேப் என அறியப்பட்டது) இப்போது வணிகங்களுக்கான ஒரு புதிய கண்டுபிடிப்பு மையமாக உருவாகிறது. இங்குதான் பயனர்கள் தாங்கள் பின்தொடரும் சேனல்களின் அப்டேட்களைப் பார்ப்பார்கள், இனி விளம்பரங்களையும் பார்ப்பார்கள். இது வணிகங்களுக்கு தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மில்லியன் கணக்கான WhatsApp பயனர்களிடம் கொண்டு செல்ல ஒரு பெரிய வாய்ப்பை வழங்கும்.
சந்தாக்கள் மற்றும் விளம்பரங்களைத் தவிர, WhatsApp மேலும் பல புதுமைகளை வணிகங்களுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம், சிறு வணிகங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் இன்னும் திறம்பட தொடர்பு கொள்ளவும், தங்கள் வணிகத்தை வளர்க்கவும் முடியும். இது WhatsApp-ஐ வெறும் ஒரு மெசேஜிங் ஆப்-ஆக இல்லாமல், ஒரு முழுமையான வணிக தளமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
WhatsApp-ன் இந்த புதிய அம்சங்கள் வணிகங்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். பயனர்கள், புதிய வணிகங்களை கண்டறியவும், அவர்களுக்கு பிடித்த சேனல்களை ஆதரிக்கவும் இது உதவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Infinix Note 60, Note 60 Edge, Note 60 Pro Reportedly Spotted on SDPPI Certification Site; Specifications Revealed on Geekbench