ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.331 க்கான வாட்ஸ்அப் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேஸ்புக் அடிக்குறிப்பை உள்ளடக்கியுள்ளது.
Android அண்ட்ராய்டு பயனர்களுக்காக, WhatsApp புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது
அண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் (WhatsApp), புதிய பீட்டா பதிப்பைப் பெற்றுள்ளது. இது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேஸ்புக் (Facebook) அடிக்குறிப்பைக் கொண்டுவருகிறது. உடனடி செய்தி செயலி (instant messaging app) எதிர்பார்த்த இருண்ட தீம் (Dark Theme) கொண்டுவருவதற்கான வளர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது இன்னும் பொதுவில் தெரியவில்லை. தனித்தனியாக, ஐபோன் பதிப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் ஆன்லைனில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருண்ட தீம் (Dark Theme) இடம்பெறும். இருண்ட தீம்-ஐ (Dark Theme) அதன் உடனடி செய்தி செயலிக்கு கொண்டு வருவதற்கான திட்டங்களை வாட்ஸ்அப் முறையாக வெளியிடவில்லை. ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் (வலை வெளியீடு) பிழை திருத்தங்களுடன் பதிப்பு 2.19.329-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பீட்டா சோதனையாளர்களுக்காக, ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.331-க்கான வாட்ஸ்அப் வெளியிடப்பட்டது. இது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேஸ்புக் லோகோவைக் காண்பிக்கும் அடிக்குறிப்பைக் (footer) கொண்டுவருகிறது. பேஸ்புக் அடிக்குறிப்பு, வரவேற்புத் திரையிலும் (welcome screen), சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்பின் அமைப்புகள் மெனுவிலும் (settings menu) தெரியும். மேலும், இது ஸ்பிளாஸ் திரையிலும் (Splash Screen) கிடைக்கிறது.
பேஸ்புக் தனது புதிய லோகோவை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இது நிறுவனத்தின் பெயரை அனைத்து பெரிய எழுத்துக்களிலும் காட்டுகிறது. கலிஃபோர்னியாவை (California) தளமாகக் கொண்ட சமூக வலைதள நிறுவனமான மென்லோ பார்க் (Menlo Park), அதன் மறு பிராண்டிங் அனைத்து தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் பொருட்களிலும் தெரியும் என்று அறிவித்தது. புதிய அடிக்குறிப்பு மூலம் மறு பிராண்டிங்கைக் கொண்ட முதல் சில பேஸ்புக் தயாரிப்புகளில் வாட்ஸ்அப் தோன்றுகிறது.
![]()
Android பீட்டா பதிப்பிற்கான சமீபத்திய வாட்ஸ்அப் "FACEBOOK-ல் இருந்து" அடிக்குறிப்பைக் கொண்டுவருகிறது
வாட்ஸ்அப் பீட்டா வாட்சர் WABetaInfo சமீபத்திய பீட்டா வெளியீட்டில் பேஸ்புக் அடிக்குறிப்பை முதலில் கண்டறிந்தது. இருப்பினும், கேஜெட்ஸ் 360 மாற்றத்தை சுயாதீனமாக சரிபார்க்க முடிந்தது. கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) நடத்தும் பீட்டா சோதனை திட்டத்தில் பங்கேற்பதன் மூலமாகவோ அல்லது APK Mirror மூலம் வெளியீட்டை ஓரங்கட்டுவதன் மூலமாகவோ புதுப்பிப்பை நேரடியாக பதிவிறக்குவதன் மூலம் அதன் இருப்பை நீங்கள் காணலாம். பீட்டா புதுப்பிப்பு உங்கள் சாதனத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், இது சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் பிழைகள் இருக்கலாம்.
ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான சமீபத்திய பீட்டா பதிப்பைத் தவிர, வாட்ஸ்அப் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருண்ட தீம் (Dark Theme), ஐபோன் செயலிக்கு கொண்டு வருவதற்கு நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. WABetaInfo புதிய வளர்ச்சியைக் குறிக்கும் படத்தை ட்வீட் செய்துள்ளது. அதன் உடனடி அறிமுகத்தை குறிக்க "soon" என்ற ஹேஷ்டேக்கையும் ஆதாரம் பயன்படுத்தியுள்ளது. ஆயினும்கூட, வாட்ஸ்அப் இருண்ட தீம் (Dark Theme) சுற்றியுள்ள அதிகாரப்பூர்வ விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
#WHATSAPP #DARK #SOON #IOS pic.twitter.com/a4TLzbiP1J
— WABetaInfo (@WABetaInfo) November 13, 2019
அண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.327-க்கான வாட்ஸ்அப்பில் ஒரு இருண்ட இயல்புநிலை வால்பேப்பர் (Dark Default Wallpaper) சமீபத்தில் காணப்பட்டது. இதேபோல், ஐபோனுக்கான வாட்ஸ்அப் இருண்ட தீமின் (Dark Theme) இரண்டு தனித்துவமான பதிப்புகளை உள்ளடக்கியதாக யூகிக்கப்படுகிறது.
WABetaInfo குறிப்பிட்டுள்ளபடி, வழக்கமான பயனர்களுக்கான வாட்ஸ்அப்பின் புதிய பதிப்பை Android (வலை வெளியீடு) வெளியிட்டுள்ளது. புதுப்பிப்பு, பதிப்பு 2.19.329-ஐக் கொண்டு, பிழைத் திருத்தங்களை உள்ளடக்கியது மற்றும் வாட்ஸ்அப் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately