நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது WhatsApp for Android கொண்டு வந்துள்ள Chat Theme பற்றி தான்.
வாட்ஸ்அப் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜ் தளமாகும், மேலும் இது ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கானவர்களால் அணுகப்படுகிறது. இதில் அதிக பயனர்களை சேர்க்க மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. பெரிய அளவில் மாற்றங்களைச் செய்து நீண்ட காலமாகிவிட்டது. ஆனால் இந்த செயலி விரைவில் தீம்கள் அம்சத்தை மாற்றும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப்பின் புதிய தோற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். WABetaInfo வெளியிட்ட தகவலின் படி இந்த அம்சம் பயனர்கள் சேட் பாக்ஸ் உள்ளே புதிய தீம் மற்றும் அதனுடன் இணைந்த வால்பேப்பரையும் தேர்வு செய்ய அனுமதிக்கும்.
ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் புதிய தீமில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய UI மூலம் பயனர்களுக்கு பல வடிவமைப்பு விருப்பங்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது பயனர்கள் whatsapp ஸ்டேட்டஸ்களில் மற்றவர்களைக் குறிப்பிட அனுமதிக்கும். மெசேஜிங் கிளையன்ட் இந்த அம்சத்தை பயன்பாட்டின் எதிர்கால பதிப்பில் வெளியிடுவதற்காக உருவாக்கி வருகிறது. இது ஆண்ட்ராய்டு பதிப்பு 2.24.20.12 க்கான WhatsApp பீட்டா பதிப்பில் வெளிவந்துள்ளது. இதில் பயனர்கள் பல வடிவமைப்பு பாணிகளிலிருந்து தங்களுக்குப் பிடித்த விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துத் தேர்வுசெய்யலாம்.
வாட்ஸ்அப்பின் புதிய தீம் அம்சம் ஆண்ட்ராய்டு 2.24.20.12 அப்டேட்டில் காணப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டுக்கான பீட்டா புதுப்பிப்பு பயனர்களுக்கு மிகவும் மாறுபட்டதாகவும் தனிப்பயனாக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த அம்சம் வெளியிடப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சாட்களின் தோற்றத்தை மாற்ற முடியும். டார்க் தீம்களைப் பயன்படுத்த விரும்பும் பயனர்களும் பிரகாச அளவை சரிசெய்ய முடியும் என்று தெரியவந்துள்ளது. இப்போதைக்கு இந்த அப்டேட் ஆய்வில் மட்டும் தான் உள்ளது. Google Play பீட்டா திட்டத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்குக் கூட இது கிடைக்காது.
இந்த அம்சம் அனைவருக்கும் எப்போது கிடைக்கும் என்பதற்கான காலக்கெடு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பீட்டா பதிப்பில் வாட்ஸ்அப்பை இயக்கும் பயனர்கள் இப்போது அமைப்புகளில் அம்சத்தைப் பார்க்க முடியும். இப்போது வரை, வாட்ஸ்அப் தீம் போனின் இயல்புநிலை தீமுடன் இணைந்து உள்ளது. மொபைல் போன் டார்க் தீமில் இருந்தால், செயலையும் டார்க் தீமில் இருக்கும். மேலும், மொபைலின் அமைப்பு லைட் தீமில் இருந்தால், வாட்ஸ்அப்பும் அதே தீமில் இயங்குகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் வெளியிட உள்ள புதிய அம்சம், பயனர்கள் வாட்ஸ்அப் செயலிக்கு என தனி தீமை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்