பிப்ரவரி 1, 2020 முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்மார்ட்போன்களில் இயங்குவதை நிறுத்தப்போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயனர்கள் தங்களின் தற்போதைய கணக்குகளைப் பயன்படுத்த முடியாது, மேலும், அவர்கள் chats history-ஐ காலக்கெடுவிற்கு முன் ஏற்றுமதி செய்யாவிட்டால் அவர்களின் chats-களை இழக்க நேரிடும். சமீபத்தில், விண்டோஸ் போன் பயனர்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் டிசம்பர் 31, 2019 முதல் நிறுத்தியது. அதாவது சில நாட்களுக்கு முன்பு. பிப்ரவரி 1 காலக்கெடுவுடன், ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களையும், iOS 8 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்த பயனர்கள் ஏற்கனவே புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்குவதிலிருந்தோ அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை மீண்டும் சரிபார்க்கவோ தடைசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அடுத்த மாதம் வரை அதைப் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். காலக்கெடுவுக்குப் பிறகு, இந்த பயனர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது.
குறிப்பிட்டுள்ளபடி, அடுத்த மாதம் பிப்ரவரி 1-க்குப் பிறகு Android பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆதரிக்கப்படாது என்பதை உடனடி செய்தியிடல் செயலி உறுதிப்படுத்தியுள்ளது. IOS 8 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் உள்ள ஐபோன் பயனர்களும் ஆதரிக்கப்பட மாட்டார்கள். இதன் பொருள் மில்லியன் கணக்கான சாதனங்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது. இந்த சாதன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போன்களை புதிய பதிப்புகளுக்கு அப்டேட் செய்ய வேண்டும், புதிய ஸ்மார்ட்போனைப் பெற வேண்டும் அல்லது அவர்களின் எல்லா உரையாடல்களையும் இழக்காமல் இருக்க அவர்களின் chats-ஐ ஏற்றுமதி செய்ய வேண்டும்.
உங்கள் chats-ஐ சேமிக்க, வாட்ஸ்அப்பிற்குச் சென்று, நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் chat-ஐ திறந்து chat திரையின் மேல் வலதுபுறத்தில் உள்ள ‘three dots' tap செய்யவும். More > Export Chat > தட்டவும், நீங்கள் ஊடகத்தை (media) சேர்க்க விரும்புகிறீர்களா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பொருத்தமான ஆப்ஷனை தேர்ந்தெடுத்ததும், உங்கள் chat-களைச் சேமிக்க விரும்பும் தளத்தைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்பும் ஆப்ஷனையும் நீங்கள் தேர்வு செய்யலாம். அங்கு சேமிக்கப்பட்ட chat-களை, பின்னர் வர வைக்கலாம். Export Chat ஆப்ஷன் ஜெர்மனியில் கிடைக்கவில்லை என்று நிறுவனம் குறிப்பிடுகிறது.
ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 உள்ளிட்ட KaiOS 2.5.1+ இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட போன்களில் வாட்ஸ்அப் இன்னும் செயல்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு, Android OS 4.0.3 மற்றும் புதிய மற்றும் iOS 9 மற்றும் புதியவற்றில் இயங்கும் போன்களை வாட்ஸ்அப் பரிந்துரைக்கிறது.
WhatsApp for Windows Phone Will No Longer Be Officially Supported
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்