புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (version 2.20.197.3)சோதனை செய்யப்பட்டு வருகின்றன
வாட்ஸ்அப் நோட்டிபிகேஷனை 1 வருடம் வரையில் மியூட் செய்யும் வசதி தற்போது உள்ளது
வாட்ஸ்அப்பில் நோட்டிபிக்ஷேனை நிரந்தரமாக மியூட் செய்தல், மெசேஜ் எக்ஸ்பைரி உள்ளிட்ட அம்சங்கள் வரவுள்ளன.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஓர் அங்கமான வாட்ஸ்அப்பில் வாடிக்கையார்களின் வசதிக்கேற்ப புதிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தனிநபர் மெசேஜ் மற்றும் குரூப் மெசேஜ் சாட்டில் இரண்டு வசதிகளை கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதன்படி, நோட்டிபிக்கேஷன் பகுதியில் 'Mute Always' என்ற ஆப்ஷன் கொண்டு வரப்படுகிறது. இதுவரையில் ஒரு தனிநபர் சாட் அல்லது குரூப் சாட்டில் மியூட் நோட்டிபிகேஷனில் அதிகபட்சமாக ஒரு வருடத்துக்கு மட்டும் மியூட் செய்யும் வகையில் இருந்தது. இனி ஆயுட்காலம் முழுவதும் அந்த குரூப்பில் இருந்து, குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து வரும் நோட்டிபிகேஷனை முடக்கலாம்.
இதே போல் மெசேஜ் எக்ஸ்பைரி என்ற ஆப்ஷனும் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, ஒரு மெசேஜை அனுப்பும் போது குறிப்பிட்ட நாள், நேரத்தை செட் செய்து கொள்ளலாம். நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அந்த மெசேஜ் தானாக டெலிட் ஆகிவிடும். இதற்கு முன்பு இமெயிலில் இந்த வசதி இருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பிலும் இது கொண்டு வரப்படுகிறது.
மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (version 2.20.197.3) சோதனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இது அனைத்து வாட்ஸ்அப்களிலும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
![]()
ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப், இந்த புதிய அப்டேட்களை சோதனை செய்து வருகிறது.
Photo Credit: WABetaInfo
மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (version 2.20.197.3)சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளன.
![]()
வாட்ஸ்அப் மெசேஜ் 7 நாளில் எக்ஸ்பைரி ஆகும் வகையிலான அம்சங்கள் கொண்டு வரப்படுகிறது
Photo Credit: WABetaInfo
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Supernova’s First Moments Show Olive-Shaped Blast in Groundbreaking Observations
Intense Solar Storm With Huge CMEs Forced Astronauts to Take Shelter on the ISS
Nearby Super-Earth GJ 251 c Could Help Learn About Worlds That Once Supported Life, Astronomers Say
James Webb Telescope May Have Spotted First Generation of Stars in the Universe