2016 ஆம் ஆண்டில் பெண் எமோஜிகள் அதிகம் வெளியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
2014 ஆம் ஆண்டின் பிறகு வரும் மிகப்பெரிய அப்டேட்
நம் அன்றாட வாழ்வில் போன்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமாக தற்போது எமோஜிகள் உறுவாகிவிட்டது. அப்படி நாம் பயன்படுத்தும் எமோஜிகளை பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்து அதை ஓழுங்கு படுத்துவதே ‘யுனிகோட் கான்சோர்டியும்' என்னும் நிறுவனத்தின் பொறுப்பாகும்.
இதுவரை சுமார் 230 புதிய எமோஜிக்களை உறுவாக்கியுள்ள நிலையில் பல்வேறு தளங்களில் இந்த ஆண்டு யுனிகோட் ‘எமோஜி 12.0' என்னும் பெயரின் கீழ் வெளியாகவுள்ளது. 59 பேஸ் எமோஜிகள் நிறம் மற்றும் பாலினம் மாறுகையில் அவை சுமார் 230 ஆக உயர்கிறது.
அதில் முக்கிய எமோஜிக்களாக இந்து கோவில், சேலை, ஆட்டோ ரிக்ஷா, விளக்கு, காதுகேளாதவர், பேராஷூட், சொட்டு இரத்தம், வளையத்தை கொண்ட கோள், பட்டம், வெங்காயம் மற்றும் உதவி நாய் போன்ற பல எமோஜிக்கள் வெளியாகி அசத்தி வருகிறது.
மேலும் இந்த எமோஜிகளின் மாதிரி புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், இவைகள் ஆப்கள் மற்றும் கணினிகளில் வெளியாகும்போது மாற்றங்களுடனே வெளியாகுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எமோஜிக்கள் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் வெளியாகும் என தகவல் வந்துள்ள நிலையில் அதற்கு முன்னரே எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு வெளியான எமோஜி அப்டேட்டிற்கு பிறகு வெளியாகியுள்ள பெரிய அப்டேட் இதுவே. மேலும் 2016 ஆம் ஆண்டில் பெண் எமோஜிகள் அதிகம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாற்று திறனாளிகள் மற்றும் ஓர்பாலின ஈர்பாளர்களை குறிப்பிடும் மற்றும் பயன்படுத்தும் எமோஜிக்களும் வெளியானது உலக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இவைகளுடன் ஏற்கனவே வெளியாகியுள்ள பனிக்கட்டி, பூண்டு, வாஃப்ல், தேவாங்குகள் மற்றும் கொட்டாவி விடும் எமோஜிகளும் வெளியாக காத்திருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
New Electrochemical Method Doubles Hydrogen Output While Cutting Energy Costs