பயனாளர்க்கு வரும் அழைப்புகளில் இருந்து அழைப்பவர்களின் பெயரை அறிந்து கொள்ள உதவி வரும் ட்ரூகாலர் நிறுவனம் தற்போது தனது புதிய அப்டேட்டில் கால் ரெக்கார்டிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனாளர்களின் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை ஆராய்ந்து அழைப்பவர்களின் பெயரை அறிந்துகொள்ள உதவும் ட்ரூகாலர் செயலி 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஹலன் மற்றும் நமி ஆகியோரால் தொடங்கப்பட்ட அந்த செயலியை தற்போது லட்சக்கணக்கானோர் தங்களது ஸ்மார்ட் போனில் பயன்படுத்தி வருகின்றனர்.
மோசடி அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் இந்த செயலியால் பயனாளர்கள் எச்சரிக்கப்படுவதால், இந்த செயலி வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் மோசடி எண்களில் இருந்து வரும் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க முடியும்.
இந்நிலையில், தனது புதிய அப்டேட்டில் கால் ரெக்கார்டிங் வசதியை ட்ரூகாலர் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் அழைப்புகள் வரும்போது, அந்த அழைப்பை பதிவு செய்ய ஒரு பட்டனை அழுத்தினால் அந்த அழைப்பு பதிவு செய்யப்படும்.
கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி தற்போது ப்ரீமியம் பயனாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ப்ரீமியம் இல்லாத சாதாரண பயனாளர்கள் 14 நாட்களுக்கு இந்த சேவையை இலவசமாகப் பெற முடியும்.
ஆட்டோ ஸ்டோரேஜில் சேமிக்கப்படும் இந்த அழைப்புகளைக் கொண்டு, மோசடி மற்றும் அச்சுறுத்தல் அழைப்புகளை பயனாளர்கள் அடையாளம் காண முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய அப்டேட்டில் விளம்பரம் இல்லாத சேவையையும் பெற முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்