போன் செய்பவர்களின் அடையாளத்தை கண்டறியும் செயலியான ‘ட்ரூ காலர்' தனது செயலியை தினம்தோறும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடிஷ் நிறுவனமான ‘ட்ரூ காலர்' எஸ்.எம்.எஸ்கள், வீடியோ கால்கள், பேமன்ட்ஸ் சேவைகளை வழங்கி வருகிறது. பீரிமீயம் வாடிக்கையாளர்களாக சுமார் 5 லட்சம் பேர் இந்த ஆப்பை பயன்படுத்தி வரும் நிலையில் சுமார் 130 மில்லியன் தினசரி வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பை பயன்படுத்துவதாக தற்போது வெளியான தகவல் தெரிவிக்கிறது.
இந்திய சந்தையில் நாங்கள் இன்னும் விரிவடைய முடிவெடுத்துள்ளோம், இன்னும் பல சேவைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் எல்லா வகையிலும் உதவ திட்டமிட்டுள்ளோம் என ‘ட்ரூ காலர்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அலான் மாமேடி கூறினார்.
மேலும் வந்துள்ள தகவல் படி, 10 வாடிக்கையாளர்களில் ஒருவர் தனது வங்கி கணக்கை ‘ட்ரூ காலர் பே' (Truecaller Pay) ஆப்புடன் இணைத்துள்ளனர். ‘ட்ரூ காலர்' வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 60% இருக்கிறது. இந்த ஆப் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்ட போது ‘காலர் ஐடி' வசிதியுடன் மட்டுமே வெளியானது.
ஆனால் தற்போது தொடர்ந்து செய்யப்பட்டு வந்த அப்டேட்கள் மூலம் ‘ஸ்பாம் காலர்கள்' ‘பிளாக்டு காலர்கள்' போன்ற பல முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பெங்களூர், குரூகிராம் மற்றும் மூம்பை போன்ற நகரங்களில் செயல்பட்டு வரும் ‘ட்ரூ காலர்' நிறுவனத்தின் பெருபான்மையான பணியாளர்கள் இந்தியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்