150 மில்லியன் டாலர் நிதி மருத்துவ பணியாளர்கள், பொருட்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான கஷ்ட நிவாரணங்களுக்காக ஒதுக்கப்படும் என்று டிக்டாக் கூறியது.
Photo Credit: Lionel Bonaventure/ AFP
150 மில்லியன் டாலர் நிதி, மருத்துவ பணியாளர்கள், பொருட்களுக்கு ஒதுக்கப்படும் என்று டிக்டாக் கூறியது
வேகமாக வளர்ந்து வரும் மொபைல் வீடியோ செயலியான TikTok, கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் டாலர் வழங்கவுள்ளது. வழங்கப்படும் நிதி "உலகளாவிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ ஊழியர்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு" என்று டிக்டாக் கூறியது.
Google, Facebook மற்றும் Netflix உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்தும், Microsoft, Amazon மற்றும் Twitter இடமிருந்து இதேபோன்ற அறிவிப்புகளை இந்த நடவடிக்கை பின்பற்றுகிறது.
அமெரிக்க நோய்கள் கட்டுப்பாட்டு மையங்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி மற்றும் தென் கொரியா உள்ளிட்ட கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் பொருட்களை விநியோகிக்க பணிபுரியும் ஏஜென்சிகள் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ பணியாளர்கள், பொருட்கள் மற்றும் கஷ்ட நிவாரணங்களுக்காக 150 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என்று டிக்டோக் கூறியது.
மற்றொரு 40 மில்லியன் டாலர், டிக்டாக்கின் பல்வேறு பயனர் சமூகங்களின் குழு பிரதிநிதிகளுக்கு சேவை செய்யும் அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்கப்படும் என்று ஜு (Zhu) கூறினார். ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, பாதிக்கப்பட்ட கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று கூறியது. உலகெங்கிலும் தொலைதூர கற்றல் முயற்சிகளை ஆதரிக்க "படைப்பு கற்றல் நிதிக்கு" மற்றொரு 50 மில்லியன் டாலர் பயன்படுத்தப்படும்.
குறுகிய இசை வீடியோக்களுக்கு பிரபலமான டிக்டாக், சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்படும் சமூக தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. டிக்டாக் மார்ச் மாதத்தில் உலகளவில் 65 மில்லியன் பதிவிறக்கங்களைக் கண்டது. இதை பகுப்பாய்வு தளமான சென்சார் டவர் (SensorTower) தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket